பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் கையிடத்தே கொண்ட வேலினராயும், கண்டார் அஞ்சத்தக்க தோற்றத்தினைக் கொண்டவராயும், காலன் சினந்து எழுந்தாற் போன்று விளங்குப்வராயும் தடாரிப் பறையின் ஒசையினைக் கேட்டதும் மறக்குடியினர் எழுவராயினர் ஆகலான், இனிப் பகைவராற் கவர்ந்துபோகப்பெற்ற நிரை மீள்கின்றதும் உளதாம். காலன் கிளர்தல் - காலன். உயிர்களைக் கவருதற் பொருட்டாகச் சினத்துடன் எழுதல், அவன் தன் செயலில் தவறாமை உடையனாவதுபோல இவரும் தவறார்; பகைவர் உயிரிழந்து அழிவது உறுதி என்பது இதன் குறிப்பாகும். உளர்தல் அசைதல், இது, அலையலையாகத் திரண்டுவருகின்ற மறவரைக் குறித்தது. கூட்ட மிகுதியினால், அவர் அசைந்து வருவாராயினர் என்க. இதனால், போர்க்கு அழைப்பதான கிணைப்பறையினது ஒலியினைக் கேட்டதும் திரண்டு வந்து கூடிய வீரர்களின் பெருக்கம் நன்கு உணரப்படும். - கிணைப்பறையின் பூசலையும், அதனைத் தொடர்ந்து வந்து கூடிய படைமறவரின் ஆரவாரத்தையும், அவற்றைக் கண்டோர் உரைக்கும், நிரைப்பெயர்வும் உண்டு என்றாற் போன்ற சொற்களையும் கொண்டதாக இத்துறை விளங்கும். இதனைப் 'படையியங்கு அரவம்’ என்றே தொல்காப்பியம் கூறும். வெட்சியாரால் தம்முடைய நிரை கொள்ளப்பட்ட காரணத்தால், இக் கரந்தை மறவர், அந்தப் பழியினைத் துடைக்கவேண்டு மென்னும் துடிப்பினாலும், அதனால் மிக்கெழுகின்ற சினத்தினாலும், கடுஞ்சினத்துடன் திரள்பவராவர். இத்துறையினும், பிறவற்றினும், இவ்வாறு வெட்சியார், கரந்தையார் ஆகிய இருவரது நிலைகளையும் பகுத்துக் காண்பது சிறப்பாகும். . . . . 2. அதரிடைச் செலவு - ஆற்றார் ஒழியக் கூற்றெனச் சினை இப் போற்றார் போகிய நெறியிடையேகின்று. போரிடுதற்கு இயலாதவராகிய நிலையினர் ஊரிடத்தே நிற்கப், பிறரெல்லாம் கூற்றம் என்னுமாறு சினங்கொண்டவராகப், பகைவர்கள் ஆநிரைகளைக் கொண்டு சென்ற அந்த நெறியிடத்தே, அவரைப் பின்பற்றித் தாமும் செல்லுவது, அதரிடைச் செலவு ஆகும். - - - போற்றார்-பகைவர். ஆற்றார்.போருக்கு ஆற்றார்; சிறாரும், முதியரும், பிணியுடையோரும் ஆகிய மக்கள். வெட்சியார் தாம் செல்வதற்குரிய வழியினைத் தாமே தேர்ந்து கொள்ளற்கு உரியர்; ஆனாற் கரந்தையாரோ வெட்சியார் மீண்டு சென்ற அந்த