பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 'உளர்செரு’ என்பது, கரந்தை மறவர்கள், மேற்சென்று தாக்கியும், தம்மைப் பகைவரது தாக்குதலினின்றும் தடுத்தும், சுற்றிச் சுழன்று போரிடுதல் ஆகும். வளைஇ தாக்கி, செருப்புரிந்தன்று' என்பன, கண்ணுற்றதனைத் தொடர்ந்த முறையான செயல்களாம், வெட்சியிற் போன்று ஒற்றியறிதலும் புறத்திறையும் ஆகியன இங்குக் கூறப்படவில்லை. ஆனால், தொல்காப்பியம், 'புடைகெட ஒற்றின் ஆகிய வேய்' என, நிரைமீட்டற்கு எழுந்தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றிய ஒற்றுவகையின் வந்து ஒதிய குறளைச் சொல்லையும், வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை எனக், கரந்தையார் தமது நிரைப்புறத்துச் சென்று விரைவொழிந்து இருக்கும் இருக்கையினையும் கூறுகின்றது. புலிக்கணமும் சீயமும் போர்க்களிறும் போல்வார் வலிச்சினமும் மானமும் தேசும் - ஒலிக்கும் அருமுனை வெஞ்சுரத்து ஆன்பூசற்கு ஓடிச் - செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து. 25 கரந்தை மறவர்கள் தம் வளமிக்க இனத்தாற் புலிக்கூட்டத்தை ஒப்பவர்கள், மானத்தால் சிங்கக் கூட்டத்தை நிகர்த்தவர்கள்; பெருமையால் போர்க்களிறுகளின் திரளைப் போன்றவர்கள். இத்தகையவர்கள், ஆரவாரிக்கின்ற, கிட்டுதற்கு அரிய இடமான வெஞ்சுரத்தினிடத்தே, ஆநிரை மீட்டலாகிய போரினைக் குறித்தவராகக் கடுகிச் சென்று, சினத்தால் மிகுந்தவராகிப் பகைவராகிய வெட்சிமறவருடன் போரிட்டனர். தேசு-பெருமை, சீயம்-சிங்கம். 4. புண்ணொடு வருதல் மண்ணொடு புகழ் நிறீஇப் புண்ணொடு தான் வந்தன்று. நிலத்தோடு அது உளதாகுங் காலம் வரையும் தம் புகழும் நிலைபெறுமாறு நிற்கச் செய்தவராகத், தாம் போரிற் பெற்ற விழுப்புண்களொடு, கரந்தை மறவர், தம்முடைய ஊருக்குத் திரும்பி வருதல், புண்ணொடு வருதல் ஆகும். போரிற் புண்பட்டு வருதல் வெட்சியார்க்கும் கரந்தை யார்க்கும் சிறப்பாயினும், கரந்தையாரின் செயலது சிறப்புப் பற்றி அவர்க்கு விதந்து உரைக்கப்பட்டது. இந்தத் துறையினால், புண்பட்டு வருபவரை மருந்திட்டு நலமாக்குவதற்கான ஏற்பாடு களையும் தமிழகப் படையினர் பண்டே கொண்டிருந்தமை உணரப்படும்.