பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வாள்கள் கொள்ளை கொள்ளத்தான் களத்திலேயே பட்டும் வீழ்ந்தான்.அவன் களத்தினின்றும் ஒளித்துச்சென்று.இங்குவந்து மீளவும் தோன்றமாட்டான்' என்று கூறினால், அதுதான் வியப்பிற்கு உரியதாமோ? நிரை மீட்டு வந்தவர், தம்முள் காணாதுபோன வீரன் ஒருவனைக் குறித்துச் சொல்லியது இது. புரைப்பின்று உளப்பட்ட வாயெல்லாம் ஒள்வாள் கவர என்றதனால், அவனுடல் அடையாளந் தோன்றாவாறு சிதைக்கப்பட்டுப் போயினதென்பது விளங்கும். 6. ஆளெறி பிள்ளை வருவாரை எதிர் விலக்கி - ஒருதான் ஆகி ஆள்எறிந்தன்று. பகைவரது போர்வெறியின் எதிரே நிற்பதற்கு ஆற்றாதவராகி ஓடிவருபவரான கரந்தை மறவரை, எதிர் நின்று தடுத்து விலகிப் போகச் செய்து, தான் ஒருவனேயாகப் பகைவரிடைப் புகுந்து, பகைவீரரைக் கொன்றழிக்கும் வீரனது ஆண்மை, ஆள் எறி பிள்ளை ஆகும். - - - பிறர் உயிர்க்கு அஞ்சியவராக ஓடி வருகிறபோது இவன் மட்டும் அஞ்சானாகிச் சென்று பகைவரை வெட்டி வீழ்த்திய ஆண்மையின் சிறப்பினைக் குறிக்கவே பிள்ளை' என்றனர். அவனே மகன்’ எனச் சிறப்பாகப் போற்றற்கு உரிய புகழினன் என்பது கருத்து. தன் முடிபினைக் கருதாது செயற்பட்ட பிள்ளைமைத் தன்மையன் அவன் என்பதும் விளங்கும். - பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க ஆளெறிந்து கொள்ளைகொள் ஆயம் தலைக்கொண்டார் - எள்ளிப் பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான் ஒருதனியே நின்றான் உளன். - 28 பகைவராலே கொள்ளை கொள்ளப்பட்டுப் போயின ஆநிரையினை அடைந்த கரந்தை மறவர்கள், அவருடன் போரிட்டு, வலியழிந்தவராகிக் களத்தினின்றும் மீண்டுபோகவும், அழகிய வீரக்கழலினனாகிய ஒருவன் மட்டும், தான் மீண்டு போகானாகினான். போகும் வீரரின் செயலினை இகழ்ந்துரைத் தவனாக, மேல் வருவதை அறியாது செயற்படுகின்ற சிறுபிள்ளையினைப் போலத், தான் ஒற்றைத் தனியனாகவே களத்திடை நின்று, வீழ்ந்த பகைவரது பிணங்கள் மிகும்படியாக, அவர்களை வெட்டி வீழ்த்தினான். அதனால், அவன், யாவர் உளத்தும் உளனாகிய ஒருவனுமாயினான்.