பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பகைவருடைய குடரை மாலையாகச் சூட்டிக் கொண்டு, வேலினைச் சுழற்றி, விருப்புடன் ஆடி மகிழ்வது, பிள்ளையாட்டு ஆகும். * மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து கூட்டிய எஃகங் குடர்மாலை-குட்டியபின் மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட வேறிரிய விம்மும் துடி. 30 பகைவரை மாளப் பண்ணின பிள்ளைத் தன்மையினை உடையவன், வெட்சி மறவரது மார்பினைப் பிளந்து, மீளப் பறித்த தன் வேலினை அவரது குடர் மாலையினாலே சுற்றிக் கொண்ட பின்னர், பகைவீரர் அஞ்சி ஒடும்படியாகச் சீற்றங்கொண்டு ஆடுவானாகத் தன் கையினிற் கொண்டவேலானது திரும்புமாறு அதனைச் சுழற்றி நிற்க, அதனைக் கண்டதும் கரந்தையாரது துடிப்பறை முழக்கமும் மிக்கெழுந்தது. வேல் திரியத் துடி விம்மும் என்றது, மீண்டும் மீண்டும் அவன் பகைவரது குடலைப் பிடுங்கி மாலையாகச் சூட்டித் தன் வாளினைத் திருப்பித் திருப்பிக் குடரைக் கிழிப்பவனாக இருந்தனன் என்பதாம்.கூட்டிய-பறித்துக் கொண்ட எஃகம்-வேல். 9. கையறு நிலை வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று. இசைக் கருவியினைக் கொண்ட மாக்கள், அஞ்சத் தகும் வாட்போரினிடத்தே வீழ்ந்துபட்ட மறவனைக் கண்டு, அவன் பட்ட படியைச் சொல்லுவது, கையறு நிலை ஆகும். நாப்புலவர் சொன்மாலை நண்ணார் படையுழக்கித் தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான் - பூப்புனையும் நற்குலத்துள் தோன்றி நல்லிசையாழ்த் தொல்புலவீர் கற்கொலோ சோர்ந்திலவெங் கண். 31 பொற்றாமரைப் பூவினைச் சூடுகின்ற நல்ல பாணர்தம் குலத்திலே பிறந்த, நல்ல இசைத்திறனை உடைய, யாழாற் சிறந்த பழைமையான அறிவினை உடையவர்களே! இவனோ, பவைரது படையினைத்துகைத்து, வலிய புலியினைப் போன்று, இறுதியில் தானும் வீழ்ந்துபட்டனன். இதனைக் கண்டும் எம் கண்கள் சோர்ந்தில. எனின், அவை உணர்வற்ற கற்களாமோ? அவன் போராற்றிய மறத்தைக் கண்டுகளித்த கண்கள், அவன் வீழ்ந்ததும் தாமும் வீழ்ந்தில அதனால் இவை கற்களோ எனக்