34 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இதனால், கரந்தையார் நிமித்தத்தினைக் கருதுவார் எனினும், சிலசமயம் தீ நிமித்தத்தைப் பாராட்டாது சென்றும் நிரை மீட்டலை மேற்கொள்வர் எனலாம். பிணங்கமருள் பிள்ளை பெயர்ப்பப் பெயராது அணங்களுர்செய்தாளெறிதல் நோக்கி-வணங்காச் சிலையளித்த தோளான் சினவிடலைக்கு அன்றே தலையளித்தான் தண்ணடையும் தந்து. - 33 மாறுபடும் பூசலிடத்தே புள்ளொலி தீ நிமித்தமாக ஒலித்து விலக்கவும், களத்தினின்றும் பெயராது, பகைவரை வருத்தும் துன்பத்தைச் செய்தானாகப், பகைவீரரை ஒருவீரன் வெட்டி வீழ்த்துதலைக் கண்டான் அவன் மன்னன். வளையாத கல்லினை - யொத்த தோளினனான அம்மன்னன், அங்ங்னம் போராடிய சினத்தையுடைய இளங் காளைக்கு அற்றைப் பொழுதிலேயே, மருத நிலம் பலவும் அளித்து வரிசையளித்தும் பாராட்டினான். 'பிள்ளை பெயர்ப்பப் பெயராது ஆளெறிதலால் பிள்ளைப் பெயர்ச்சி ஆயிற்று. தண்ணடை - மருதநிலம், தண்ணடையும். என்றதால், பிற வரிசைகளும் அளித்தான் என்க. 12. வேத்தியன் மலிவு தோள்வலிய வயவேந்தனை வாள்வலி மறவர் சிறப்புரைத் தன்று. தோள்வன்மையாற் சிறந்த மறமன்னனை, வாள்வலிமை யினாற் சிறந்தோரான கரந்தை மறவர்கள், சிறப்புரைத்துப் போற்றுவது, வேத்தியன் மலிவு ஆகும். . அங்கையுள் நெல்லி அதன்பயம் ஆதலாற் கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த் - தங்கிச் செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வாய் உயிர்வழங்கும் வாழ்க்கை உறும். . . . 34 தேன்பிலிற்றும்வெற்றிமாலையினை உடைய நம்மன்னனது குடைநிழலின் கீழாகத் தங்கியிருந்து, பகைமையினைத் தருகின்ற வாட்போரிலே புகுந்து, பகைவரது வேலின் முனையிடத்தே உயிரினைக் கொடுக்கின்றதான இவ் வீரவாழ்க்கையானது, உறுதியினை உடையதாம். அது எவ்வாறெனின், அங்கையுள் உள்ள நெல்லியினது பழம் காணப்படுதல் போல என்க. மறக்குடியினராதலால் களத்தே பட்டு வீழ்தலால் வருகின்ற புகழ்மேம்பாட்டினையே வாழ்க்கை உறுதியாகக் கூறினர். நிழ்ற்கீழ்த் தங்கி என்பதனால், மன்னனது வெற்றிப் பெருமிதத் தினைச் சிறப்பித்தனர். செயிர் குற்றம், பகையுணர்வு. .