36 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் போர்க்களத்து ஒழிதல், மறமாண்பினன் ஒருவன் தான் ஒருவனேயாகப் பகைவரிடைப் புகுந்து புகை மறவரை வெட்டி வீழ்த்தும் ஆளெறிபிள்ளை, மீண்ட மறவர் பெற்ற விழுப்புண்ணுக்கு மகிழ்ந்தவராகக் கள்ளுண்டு களித்தாடும் பிள்ளைத் தெளிவு, பகைவீரர் குடரைச் சூட்டிய வேலினைத் திரித்துக் களித்தாடும் பிள்ளையாட்டு, களத்து வீழ்ந்தானின் தன்மையைப் பாணர் உரைத்து இரங்கும் கையறுநிலை, வீரன் மன்னனிடத்தே தானொருவனே பகைப்படை வெள்ளத்தை அழிப்பதாக உரைக்கும் நெடுமொழி கூறல், நீநிமித்தத்தையும் விலக்சிச் சென்று போரிட்டு வெற்றியுடன் மீண்ட வீரனை வேந்தன் தலையளி செய்து போற்றும் பிள்ளைப் பெயர்ச்சி, மறவர்கள் தம் வேந்தனுக்காகப் போரின்கண் மடிவதைச் சிறப்பாகப் போற்றி உரைத்து நிற்கும் வேத்தியன் மலிபு, மன்னன் மறக்குடியின் மாண்பினை உரைத்துப் போற்றும் குடிநிலை என்றவாறு பதின் மூன்று துறைகளாக நிகழுவதாம். . இந்தத்துறையமைதிகள் ஐயனாரிதனாரால் வகுக்கப்பெற்று விளங்குவன. இவை, தொல்காப்பியப் புறத்திணை இயல் கூறும் பதினான்கு துறைகளுடன் திணைப் புறனாகக் கூறப்படும் இரண்டும் கூட்டிய பதினாறு துறைகட்கும் சில பகுதிகளில் வேறுபடுவதனையும், வெட்சித் திணையிற் கூறப்படும் துறைகளினின்றும் வேறுபட்டு நிகழ்கின்ற தன்மையினையும் கவனிக்க வேண்டும். வெட்சி கரந்தை ஆகிய இரண்டனையும் வெட்சியென்னும் ஒன்றாகக் கொண்டே உரைத்த தொல்காப்பியத்தினும், இந்நூல் அதனை நன்கு ஆராய்ந்து, இருவேறாகக் கொண்டு நுட்பத்துடன் உரைத்துச் செல்லுகின்ற திட்பத்தினை நன்கு கற்றறிந்து இன்புறல் வேண்டும். ಧಿಧಿ
பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/50
Appearance