பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்கின் உவக்கிப்படவிட 41 அறிந்தவர் ஆய்ந்தநாள் ஆழித்தேர் மன்னன் எறிந்திலகு ஒள்வாள் இயக்கம்-அறிந்திகலிப் பின்ப்கலே யன்றியும் பேணார் அகநாட்டு நன்பகலும் கூகை நகும். 39 வட்டக்காலாற் சிறந்த தேரினை உடைய மன்னவன், சோதிட நூலார் தெரிந்துரைத்த நல்ல நாளிலே, பகைவரை வெட்டி விளங்கும் ஒள்ளிய வெற்றிவாளினது புறவீடு விடுதலைச் செய்தானாக, அந்த இயக்கத்தைக் கூகை அறிந்து, தானும் தன் போக்கில் மாறுபட்டு, அவனுடைய பகைவரது உள்நாட்டினிடத்தே, பிற்பகல் வேளையில் அல்லாமலும், நல்ல பகற்பொழுதிலும் தீநிமித்தமாக நகுதலைச்செய்யும். 'கூகை நன்பகலும் நகுதல் தீநிமித்தம் என்பர். 'எறிந்திலகு ஒள்வாள் இயக்கம் அறிந்து, அது பேணாரின் அகநாட்டு நகுதல் - கூறியதால், வாள்நிலை உரைக்கப்பட்டது. பேணார்-பகைவர். ஆழி-சக்கரமும் ஆம் - 4. கொற்றவை நிலை - 1 நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக் கூடாரைப் புறங்காணும் கொற்றவைநிலை யுரைத்தன்று. நீண்டதோள்களை உடையவனான தம் மன்னவன் வெற்றி கொள்வானாக என்று, நல்ல பொருள்களால் நிறைந்துள்ள பாத்திரத்தை வெற்றியாக உயர்த்து, அவன் பகைவரைப் புறங்காணுகின்ற கொற்றவையாளின் அருள்நிலையினைச் சொல்லி அவளைத் துதிப்பது, கொற்றவை நிலையாகும். கொற்றவையின் அருளுதல் நிலையினை வேட்டலால், இது கொற்றவை நிலை ஆயிற்று. - அணங்குடை நோலை பொரிபுழுக்கல் பிண்டி நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக்-கணம்புகலக் கையிரிய மண்டைக் கணமோடிகாவலற்கு மொய்யிரியத் தான்முந் துறும். - 40 தெய்வத்துக்கு உரியதான எட்கசிவும், நெற்பொரியும், அவரை துவரையும், அவலும் நிணமும் குடரும் உதிரமும் நிறைவித்துத், திரட்சி விரும்பக் கையிலே பாத்திரத்தை ஏந்திய மண்டை யினையும், பூதகணங்களையும் உடையவள் துர்க்கையாள்.அவள், நம் அரசனுக்குரிய பகைகெட்டழியுமாறு, தான் முற்படச்சென்று அருள்பவளாவாள். - -