பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் எட்கசிவு-எள்ளினை இடித்து எண்ணெய்க் கசிவுடன் படைப்பது.மோடிதான்முந்துறும் என்றமையால் அவளுடைய அருள்நிலை உரைக்கப்பட்டது. - 5. கொற்றவை நிலை-2 மைந்துடை ஆடவர் செய்தொழில் கூறலும் அந்தமில் புலவர் அதுவென மொழிப. வலியினையுடைய வீரர்கள் செய்யும் போர்த்தொழிலைச் சொல்லுதலும் அத்துறையேயாம் என, முடிவிலாத அறிவுடையோர்கள் சொல்லுவார்கள். தமருள் தலையாதல் தார்தாங்கி நிற்றல் எமருள்யாம் இன்னமென் றெண்ணல் - அமரின் முடுகழலின் முந்துறுதல் முல்லைத்தார் வேந்தன் தொடுகழல் மைந்தர் தொழில். 41 'தம்மவரான வஞ்சிமறவருள் தாம் தலைமை உடையவ ராதலும், பகைவரது தூசிப்படையினைத் தடுத்து நிறுத்துதலும், எம் படைவீரருள் யாம் இன்னதொரு சிறப்புடையோம் என எண்ணுதலும், போரின்கண் விரைந்தழிக்கும் ஊழித்தீப்போல முற்படச்சென்று செயலாற்றலுமாகிய இவை, முல்லைத்தாரினை அணிந்த வஞ்சி வேந்தனுடைய தொடுத்த கழலினைக் கொண்ட மறவர்களின், தொழில்கள் ஆம் முல்லைத்தார் கூறியது, வஞ்சி முல்லையது புறனாதல் பற்றி யாகும். இத் தொழில்கள் பலவும் கொற்றவை யாளின் அருளது நிலைபேற்றைக் குறிப்பனவாதலின், இச் செய்யுள் கொற்றவை நிலை ஆயிற்று. - 6. கொற்ற வஞ்சி வையகம் வணங்க வாளோச் சினன்எனச் செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று. செய்தொழிற் சிறப்பமைந்த வீரக்கழலினை உடையோ னாகிய வஞ்சி வேந்தன், உலகமெல்லாம் தன்னை வணங்கி நிற்குமாறு வாளோச்சி வெற்றிவீரனாகத் திகழ்ந்தான்’ எனப் படைமறவர் அவனுடைய சிறப்பினை மிகுதியாகக் கூறிப் போற்றுவது, கொற்ற வஞ்சியாகும். வஞ்சிவேந்தனது கொற்றத்தை உரைத்தலால் கொற்றவஞ்சி' ஆயிற்று. செய்கழல்-சொல்லிப் பண்ணின கழலும் ஆம்