பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நாடு பாழாய்ப்பரிய விளிவது கொல் என இரங்கியதனால் கொற்ற வள்ளை ஆகுமாறு காண்க. நடைத்தேர்-நடை பயிலுதற்குரிய சிறுதேர்."யாதுங் குற்றமற்ற அச்சிறாரின் வாழ்வும் கெடும்படியாகப் பகைநாடு அழிவதுபோலும் என இரங்குவதன் தகைமையை உணர்க. பகையிடையேயும் ஏதும் தம்பால் குற்றமிலாத சிறாரும் அழிவதனை எண்ணி இரங்கும் வீரரது உள்ளம் மிகவும் சிறப்புடைத்தாகும். - - 8. பேராண் வஞ்சி-1 கேளல்லார் முனைகெடுத்த மீளியாளர்க்கு மிகவுய்த்தன்று. பகைவரது போர்முனையினை அழித்துவந்த தலைமைச் செறிவினையுடைய மறவர்களுக்கு, வஞ்சிவேந்தன், மிகவும் சிறப்பு வழங்குவது, பேராண்வஞ்சி ஆயிற்று. பேராண்-பெரிதான ஆண்மை. அதனையுடையரான படைத்தலைவரைச் சிறப்பித்தலால், பேராண் வஞ்சியாயிற்று. பலிபெறு நன்ன்கரும் பள்ளியிடனும் ஒலிகெழு நான்மறையோர் இல்லும்-நலிவொரீஇப் புல்லார் இரியப் பொருதார் முனைகெடுத்த வில்லார்க்கு அருள்சுரந்தான் வேந்து. 44 மன்னவன், பலியினைப் பெறுகின்ற நன்மையுடைய கோயில்களும், துறந்தாரிருக்கும் பள்ளியிடங்களும், ஒசை பொருந்திய நான்மறையோரது வீடுகளும் நலிவடைதலைக் கைவிட்டும்,போரிடற்குப்பொருந்தாத பிறரும் ஒடிப்போகும்படி விட்டும், போரிடற்கு எதிர்ந்த பகைவரது செருவினை வென்றுவரும் வில்லாளர்க்குத்தானும் அருளினைச் சுரந்தானாக, வரிசை நல்கிச் சிறப்பித்தான். - - - பகைவர்நாட்டிடத்தும் வீரரைமட்டுமே வென்று பிறருக்குத் தீமைசெய்யாது அருள்காட்டி நின்ற வீரரின் ஆண்மையை, மன்னன் பாராட்டி அருள் சுரத்தலால், இது பேராண் வஞ்சியாயிற்று. புல்லார் இரிய என்பதனால், அவரை அழித்தல் ஆண்மையொடுபட்டதன்று என்பதும் விளங்கும். 9. பேராண் வஞ்சி-2 அருந்திறை யளப்ப ஆறிய சினத்தொடு பெரும்பூண் மன்னர் பெயர்தலும் அதுவே. பேரணிகலன்களைப் பூண்டவனான வஞ்சிவேந்தன், பெறுதற்கரிய பொருளினைப் பகையரசன் திறையாக அளந்து