பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நீண்டுவிளங்கும் பெரிய கையினையும், ஒப்பிலாத மதியினை யொத்த வெண்கொற்றக் குடையினையும் உடையவனான நம் வேந்தனின்,வாள்மறவரது படைவெள்ளமானது தன்நாட்டினுள் வருதற்கு அஞ்சியவனாகப்,பெரிய மலையினைப்போல விளங்கும் கொலையானையினையும் சதிபாயும் குதிரையினையும் திறையாகக் கொடுத்துத் தன் நாட்டினை அழிவினின்றும் மீட்டுக் கொண்டான். - - கொடுத்து மீட்டான்' என்பதனால் குறுவஞ்சி ஆயிற்று. மலைமா மறமன்னள்', இகழ்ச்சிக் குறிப்பு. தாட்டாழ் தடக்கை’, ஆடவரது உறுப்பிலக்கணத்துட் சிறப்புடைத்தாக உரைக்கப்படும். அதனையுடையானாகவே வஞ்சி வேந்தனின் சிறப்பும் உரைக்கப்பட்டது. பேராண் வஞ்சிக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனித்தல் வேண்டும். 17. குறுவஞ்சி - 2 கட்டுரது வகைகூறினும் அத்துறைக்குரித்தாகும். - வஞ்சிவேந்தன் போர்ச் செயலைக் கைவிட்டிருக்கின்ற பாசறையினது கூறுபாட்டினைச் சொன்னாலும், அது குறுவஞ்சித் துறைக்கு உரிமையுடைத்தாகும். கட்டுர்-பாசறை: படை தங்குவதற்கெனப் புதிதாகக் கட்டப் பெறுவதால் கட்டுர் ஆயிற்று. - - அவிழ்மலர்க் கோதையர் ஆட ஒருபால் இமிழ்முழவம் யாழோடியம்பக்-கவிழ்மணிய காய்கடா யானை ஒருபாற்களித்ததிரும் ஆய்கழலான் கட்டுர் அகத்து. 53 ஆராய்ந்து கட்டிய கழலினை உடையவனான நம் வேந்தனது கட்டுராகிய பாசறை இருக்கையினிடத்தே, ஒருபக்கத்தே, மலர்ந்த மலர்மாலையினை அணிந்த ஆடுமகளிர்கள் ஆடி நிற்பார்கள்; ஒருபக்கத்தே முழங்குதலையுடைய முழவமானது யாழிசை யோடும் ஒத்ததாக ஒலிமுழங்கும்; மற்றொரு புறத்தே, கவிழ்ந்த மணிகளையும் சினத்தற்குக் காரணமான மதப்பெருக்கையும் உடைய போர் யானைகள், களிப்புற்றுப் பிளிறியவாக நிற்கும். அரசனும் படைஞரும் போர்மலைதலை மறந்து பாசறை யிடத்தே களித்திருக்கும் நிலையினைக் கூறுவது இது. இதுவும் வஞ்சி முற்றாத தன்மையினைக் கொண்டதனால், குறுவஞ்சி எனக் கொள்ளப்பட்டது. கோதையர் என்றது, விறலியராகிய