பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஒரு வீரனது மிக்க மறப்பண்பினைக் கண்டோர், அதனை விருப்பத்துடன் சொல்லுவது, தழிஞ்சி ஆகும். 'தழிஞ்சி' என்பது பிறரது கருத்தினைத் தானும் தழுவிக் கோடல். உயிர் பிழைக்க ஒடுவானது கருத்தின்ைத் தானும் தழுவியவனாக, அவன் முதுகிடத்து வாளோச்சாது, அவனைப் பிழைத்துச் செல்ல விட்டமையால் இது தழிஞ்சி' எனப்பட்டது. தொல்காப்பியர், புறத்திணை இயலுள், அழிபடை தட்டோர் தழிஞ்சி' எனக்கூறி, அது, வேந்தர், தம் படையாளருள், முன்பு போர்செய்துழிப் பகைவர் எறிந்த படைகளைத் தம்பால் ஏற்றுத் தடுத்து விழுப்புண்பட்டு மீண்டிருக்கும்மறவரைச்சென்று கண்டு, பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக்கோடல் தழிஞ்சி' என்று கூறுவர் (சூ-8) f கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும் தான்படை தீண்டாத் தறுகண்ணன்-வான்படர்தல் கண்ணியபின் அன்றிக் கறுத்தார் மறந்தொலைதல் எண்ணியபின் போக்குமோ எஃகு? - 55 காட்டிடத்தே தோன்றிய நெருப்பினைப் போலப் பவைர் தன்னை மீதுர்ந்து வந்த விடத்தும், அவர் வானுலகம் புகுதலை நினைந்து தன்னை எதிர்த்தபின்னர் அல்லாமல், தான் அவர்மேற் படைவிடுதலை மேற்கொள்ள்ாத தறுகண்மையினை உடையனான வீரமறவன், அப்பகைவர் வீரத்தைக் கைவிட்டு முதுகிடுதலைக் கருதியபின்னர், அவர்மேல் தன் வேலினைப் போக்குவானோ? கறுத்தார், மறந்தொலைதல் எண்ணியபின்பு எஃகு போக்கானாகவே, இது தழிஞ்சித்துறை ஆயிற்று. 20. பாசறை நிலை மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லாம் மறந்துறப்பவும் பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று. - நிறை மதியினைப் போன்ற தனது கொற்றக்குடையின் கீழாகத் தாழ்வு சொல்லியவராகப் பகைவேந்தர் எல்லாரும் தமது மறத்தினைக் கைவிட்டுப்பணிந்துபோகவும்,மறத்தகையினனான வஞ்சிவேந்தன்,அப்பாசறையாகிய கட்டுரினின்றும்போகானாகி, அந்தப் பாடிவீட்டிலேயே இருந்த தன்மையைச் சொல்வது, பாசறைநிலை ஆகும். . . -