பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் வஞ்சிப் படலம் 55 மிகுத்துச் சொல்லுவது, நல்லிசை வஞ்சி ஆகும். நல்+இசை=நல்லிசை-சிறந்த புகழ். - மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல் இடங்கெடச் சென்றிறுத்த பின்னும்-நுடங்கெரிபோல் வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற் - - செல்லப்பெருகும் சினம். . . . 59 வெற்றி கொள்ளுமாறு மேன்மேலும் பெருகுகின்ற படைப்பெருக்கினை உடையவனான வஞ்சிவேந்தனுக்குச் சிங்கம் போலக்கோபித்துத் தன்னொடுமாறுபட்டுஎழுந்தாரதுநிலத்தின் மேல், அவ்விடம் எல்லாம் வளங்கெடுமாறு சென்று வென்று தங்கிய பின்னரும், அசைந்து எரியும் நெருப்பினைப் போல, மேலும் செல்லுதற்குச் சினம் பெருகா நிற்கும்: 'மண்மேல் இடங்கெடச்சென்றி றுத்தல்' என்பது, பகைவரது படைமுனைகளொடு கூடிய அரண்களையும் படைவீடுகளையும் குறிக்கும்.அவற்றைக்கைக்கொண்டபின்னர், அவர் வீழ்ந்தனராக, அதனைக் கருதாது, அவரது நாடு முழுவதனையுமே கைக்கொள்ளக் கருகிச் சினம் பெருகும் என்க. வேந்தர்மேல்.’ எனவும் பொருள் கொள்வர்; அன்றித் தப்பிச் சென்ற பகைவேந்தர்மேல் எனினும் பொருந்தும். 24. நல்லிசை வஞ்சி-2 இறுத்தபின் அழிபு இரங்கல் மறுத்து உரைப்பினும் அத்துறை யாகும். வஞ்சிவேந்தன் பகைநாட்டை வென்று அதனைக் கைக்கொண்டு தங்கிய பின்னர், அந் நாட்டினது அழிபிற்கு இரங்குதலை அழித்துச் சொன்னாலும், அப்படிக் கூறுவது நல்லிசை வஞ்சித் துறையே யாகும். மறுத்து' என்றது. வஞ்சிவேந்தனது வெற்றிச் சிறப்பைக் கூறுதலை. இதனை மறுத்துப் பகைநாட்டு அழிபாட்டைக் கூறினால், அதுவும் இவனது வெற்றிச் சிறப்பையே கூறுவதாகும். ஆதலால், நல்லிசை வஞ்சியாகவே கொள்ளப்பட்டது. கொற்றவள்ளை' என்னும் துறைக்கும்.இதற்கும் உள்ள வேறுபாட்டினைக் கவனித்துஅறிதல் வேண்டும். அது, வரும் அழிவினைக் குறித்த இரக்கம்; இது, நிகழ்ந்த அழிவைக் குறித்து இரங்குதல். குரையழல் மண்டிய கோடுயர் மாடம் சுரையொடுபேய்ப் பீர்க்கும் சுமந்த-நிரைதிண்டேர்ப் பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப நல்லிசை கொண்டடையார் நாடு. 60 .