பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழிலக்கியங்கள் ஏராளம். அவை அக் இலக்கியம், புற இலக்கியம் என இரு கூறாகப் பகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் அக இலக்கியங்கள் எண்பது விழுக்காடும் புற இலக்கியங்கள் இருபது விழுக்காடும் நமக்குக் கிடைத்துள்ளன. அக இலக்கியம் அகத்துறையை மட்டுமே கூறுகின்றது; புற இலக்கியம் கல்வி, கொடை, ஒழுக்கம், வீரம் இவற்றைப் பற்றிக் கூறுகிறது. நான்கு கூறுகளைப் பற்றிக் கூறும் புற இலக்கியம் குறைந்தும் அகத்தினை மட்டுமே கூறும் அக இலக்கியம் மிகுந்தும் இருப்பது வியப்புக்குரிய ஒன்றுதான். தமிழ் இலக்கியங்கள் தாம் மனிதனின் வாழ்வினை இரு கூறாக்கிப் பார்த்தன. அக வாழ்க்கை - புறவாழ்க்கை என இரு கூறுகளுக்குள்ளேயே மனிதனின் வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. - தொல்காப்பியம்தான் இலக்கியச் சுரங்கம், இலக்கணச் சுரங்கம். இதிலிருந்து தோண்டி எடுக்கப்பெற்ற தங்கங்களே தமிழ்மொழில் மலிந்துள்ள நூல்கள். தொல்காப்பியம் எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று மூன்று பிரிவுகளாகப் பகுத்துப் பொருளதிகாரத்தினை அகப்பொருள் புறப்பொருள் என இரு கூறாக்கி, அந்தப் புறப் பொருளிலே புறத்திணை இயல் என்று ஒர் இயலினையே கூறுகிறது. தொல்காப்பியம் கூறும் புறத்திணை இயலினை வைத்துக் கொண்டு எழுதப்பெற்ற ஒரு நூலே புறப்பொருள் வெண்பாமாலை. இதனை இயற்றியவர் அய்யனாரிதனார். இவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.அய்யனாரிதனார்சேர மன்னர் மரபினிலே வந்தவர் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், ஒர் அறிஞர் சேர மன்னர் என்றே குறிப்பிட்டுள்ளார். புறப்பொருள் வெண்பாமாலை என்று இது பெயர் பெற்றிருந்தாலும் இதில் மருட்பாவும் உண்டு. -