பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w 56. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஒழுங்குபட்ட திண்ணிய தேர்களையும், பலவாகிய புகழொடும் கூடிய வெற்றியினைக் கொண்ட படையாகிய கடலினையும், உடையான் வஞ்சிவேந்தன், அவன், போர்மேற். சென்று தங்குகையினாலே, அவனது நற்புகழைத் தானும் போற்றிக்கொண்டு அவனை அடைந்திராத பகைவரின் நாட்டினது, முழங்கும் எரிமண்டிய மலையொப்ப ஓங்கின மாளிகைகள் எல்லாம், பேய்ச்சுரையொடு பேய்ப்பீர்க்கினையும் தம்மேற் கொண்ட வாயினவே! கோடுயர் மாடம் என்றது, பகையரசனுடைய மாளிகையை, அது தனக்குரிய கொடியினை இழந்து, சுரை பீர்க்குக் கொடிகளைச்சுமந்தது என இரங்கியமை இது.இதனாலும்,வஞ்சி வேந்தனது புகழ் கூறப்படுவது உணர்க. - தொகுத்து உரைத்தல் இவ்வாறு கூறப்பட்ட முறைமையானே வஞ்சித்திணை யானது வஞ்சியரவம் முதலாக வருகின்ற துறையமைதிகளொடு பொருந்தி நிகழ்தல் இயல்பென அறிதல் வேண்டும். அவை, வஞ்சிகூடிப் படைமறவர் திரள்தலாகிய வஞ்சியரவமும், நல்ல முழுத்தத்திலே குடையைப் புறவீடு பெயர்த்தலாகிய குடைநிலையும்; வெற்றி வாளினைப் புறவீடு விடுதலாகிய வாள்நிலையும்; கொற்றவையானது அருளைக் கூறுதலும் மைந்துடை ஆடவரது செய் தொழிலினைக் கூறுதலுமாகிய, கொற்றவை நிலையும்; வஞ்சிவேந்தனது கொற்றத்தை மிகுத்துக் கூறுதலாகிய கொற்ற வஞ்சியும்; அதனாற் பகைவர் நாடு. அழிவெய்துமென இரங்குதலாகிய கொற்றவள்ளையும்; பேராண்மை உடையாரை அரசன் சிறப்பித்தலும் பகைவர் திறைதரச் சினம் ஆறியவனாகத் திரும்புதலுமான பேராண்வஞ்சியும்; அரசனாற் சிறப்புப் பெற்ற வீரரது மாண்பினைக் கூறுதலாகிய மாராய வஞ்சியும் படைமறவன் தன் ஆண்மையைத் தானே உயர்த்துக் கூறுதலாகிய நெடுமொழி வஞ்சியும்; ஒரு மறவனது குடிமுதல்வனது வாளாண்மையைச் சிறப்பித்துக் கூறுதலாகிய முதுமொழி வஞ்சியும் பகைவரது நாட்டை எரிகொளுவுதலாகிய உழபுல வஞ்சியும்; அதனைக் கொள்ளையிடலாகிய மழபுல வஞ்சியும்; கொண்ட கொள்ளையினைப்பாணர்க்குக் கொடுத்து மகிழ்தலான கொடை வஞ்சியும், பகையரசன் திறைகொடுத்துத் தன் குடிகளைக் காக்க முன்வர அதனை ஏற்றிருத்தலும் அல்லது பாசறையிடத்துப் போரினை மறந்து களித்திருத்தலும் ஆகிய குறுவஞ்சியும்; படைஞருள் ஒருவன் தனியனாகப் பகைப்படையைத் தாங்கி