பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் காஞ்சிப் படலம் 59 இத் திணையினைப் பெருந்திணைக்குப் புறனாகும் என, 'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே(புறத்22) என உரைப்பர் தொல்காப்பியர்.அவ்வாறே கொண்டு அதற்குரிய விளக்கத்தையும் வகுப்பர்.இந்த வேறுபாட்டினை நன்றாக உளங்கொண்டு'காஞ்சி எனக் குறிக்கப்படும் இடங்களை உணர்தல் வேண்டும். அந்தக் குறிப்பு இந்நூலை ஒட்டியதாயின், அது வஞ்சியார்க்கு எதிராகத் தம் நாட்டைக் காத்து நிற்பாரது செயல்களுள் ஒன்றையும், தொல்காப்பியப் புறத்திணையியலை ஒட்டியதாயின், பெருந்திணைக்குப் புறனாக வீடுபேறு நிமித்தமான பல்வேறு நிலையாமைப்பொருள்களையும் கூறுவதென அறிதல் வேண்டும். சிலப்பதிகாரக் கால்கோட் காதையுள், செங்குட்டுவன் வடவாரிய மன்னரொடு போரிட்டு வென்றதைக் கூறும், 'இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளம் சிறந்து பாய்ந்த பண்பிற் பல்வேல் மன்னர் காஞ்சித்தானையொடு காவலன் மலைப்ப- (26:188-19) என்ற தொடர்கள், காஞ்சித் தானை' என, இந்த நூற்பொருளினை ஒட்டியே கொண்டு உரைக்கப் பட்டிருத்தலையும் காண்க. - காஞ்சித் திணையின் விளக்கம் வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன் காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று. வெவ்விய சினத்தையுடைய வேற்றுநாட்டு அரசன் போரிடலை மேற்கொண்டு வந்துவிட, அந் நாட்டிற்கு உரியவனாகிய மன்னன், தான் காஞ்சிப் பூவைத் தன்பாற் சூடிக்கொண்டவனாகத், தன் காவலிடத்தைக் காக்க நினைவது, காஞ்சித் திணை ஆகும். அருவரை பாய்ந்திறுது மென்பார்பண்டின்றிப் பெருவரைச் சீறுர் கருதிச் - செறுவெய்யோன் காஞ்சி மலையக் கடைக்கணித்து நிற்பதோ தோஞ்செய் மறவர் தொழில்? 61 செருமுனையிற்படப் பொருதுவார் இல்லாதபடியினாலே, முன்பு, ஏறுதற்கரிய மலையேறி வீழ்ந்தாயினும் சாவேம் என்று உரைக்கும் வீரத்தினையுடையோர், இன்று, இந்தப் பெருமலையிடத்ததான சிற்றுரைக் காப்பான் வேண்டிக் கருதிப் போரை விரும்புகின்றதம் மன்னவன் காஞ்சிப்பூவினைச்சூடலும், போரிடற்கு அணிவகுத்து நிற்கும் அதுவோ, குற்றத்தைப் பண்ணும் மறவரது தொழில்?