பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - புறப்பொருள் வெண்பாமாலை ഴു உரையும் ஒகாரம் எதிர்மறை, குற்றத்தைப் பண்ணும் தொழிலன்று: - - சிறந்த வினை என்பது கருத்து. தோம்-குற்றம். பகை வரவு - கேட்டதுமே போர்க்கெழாது கடைக்கணித்து நிற்பதோ? அது தோஞ்செய் மறவர் தொழில் அல்லவோ?’ எனக் கூறி, வீரன் ஒருவன் துடித்தெழுவதாகவும் இதனைக் கொள்ளலாம். - - காஞ்சித் திணையின் துறைகள் 1. காஞ்சி யதிர்வு மேல்வரும் படைவரன் மிகவும் ஆற்றா வேல்வல் ஆடவன் விறன்மிகுத்தன்று. தன் மேல் மண்டிவருகின்ற வஞ்சியாரது படைவரவினைப் பெரிதும் பொறாத, வேற்படைத் தொழிலிலே வல்லானாகிய காஞ்சி மறவனுடைய, வெற்றிச் செல்வியை மிகுத்துக் கூறுவது, காஞ்சியதிர்வு ஆகும். - - மன்மேல் வருமென நோக்கான் மலர்மார்பின் வென்வேல் முகந்தபுண் வெய்துயிர்ப்பத் - தன்மேல் பிடிக்கலும் ஆற்றாப்பெருந்தகை ஏவத் - துடிக்கண் புலையன் தொடும். - 62 அகன்ற தனது மார்பிடத்தே வென்றிவேல் பாய்ந்து முதுகுப்புறத்து உருவிய புண்ணின் காரணமாக, வெய்தாக மூச்செறியாநிற்பத் தன் வேலினைப் பிடித்திருத்தலுக்கும் ஏலாதானாகி விளங்கும் பெரிய மேம்பாட்டினை உடையவனான இந்த வீரன், மாற்றரசன் தன் மேலே மீதுர்ந்து வருமெனவும் பாரானாகித் துடியனை ஏவ, அவனும் தன் துடியினது கண்ணினைக் கொட்டி முழக்கா நிற்கும்! புண் வெய்துயிர்ப்ப என்றது,உயிர்ப்புப்புண்வழி ஒடலைக் குறித்ததாம்: மார்பிற் பட்ட புண்ணாதலால் இவ்வாறு கூறினார். 'மன்மேல் வருமென நோக்கான்-ஏவத்துடிக்கண் புலையன் தொடும் என்றது. துடியோசை கேட்டாற் பகைமன்னன் மேல்வருதல் கூடும் என்பதனையும், அவனை எதிர்க்கும் வலியழிந்து போயின தன்நிலையினையும் கருதானாக மீளவும் போரிடலைக் கருதித் துடிமுழக்க ஏவிய அவனது வீரத்தை வியந்ததாம். அதிர்வு துடியின் அதிர்வு எனக் கொள்க. 2. தழிஞ்சி பரந்தெழுதரு படைத் தானை வரம் பிகவாமைச் சுரங்காத்தன்று.