பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-காஞ்சிப்படலம்- 63. 'மன்னர்க்கு’ என்பதும் பாடம். அதற்கு, இனி, வேற்று மன்னவர்க்கு மண்ணகமோ தங்குமிடமில்லை; அவரை விண்ணகத்தின்கண் ஏற்றலையும் நம் அரசன் விரும்புவான் போலும் என்று உரைப்பதாகப்பொருள் கொள்ளுக.தன் அமர் ஒள்வாள்’-தான் கைக்கொள்ள விரும்பும் ஒள்ளிய வாள்; அது கொற்றவாள். 5. பெருங்காஞ்சி தாங்குதிறல் மறவர் தத்தம் ஆற்றல் - வீங்குபெரும் படையின் வெளிப்படுத்தன்று. எதிரிட்டு வருகின்ற மாற்றாரது படையினைத் தடுக்கும் வலியினையுடைய காஞ்சிமறவர்கள், தங்கள் தங்களது பேராற்றலை, மிக்க பெரும் வஞ்சியாரது சேனையிடத்துத் தோற்றுவித்தது, பெருங்காஞ்சி ஆகும். காஞ்சி மறவர்கள் வஞ்சியாரது பெரும்படையினை எதிர்த்தழித்து அதனால்தத்தம்ஆற்றலை வெளிப்படுத்தியதனால், இது பெருங்காஞ்சி எனப்பெற்றது. - வில்லார் குறும்பிடை வேறுவேறார்த்தெழுந்த கல்லா மறவர்கணைமாரி-ஒல்லா - - வெருவி மறவேந்தர் வெல்களிறெல்லாம் இருவி வரைபோன்ற இன்று. 66 தறுகண்மையுடைய பகைவேந்தரது போரை வெல்லும் களிறுகள் எல்லாம், விற்படை நிறைந்த அரணிடத்துப் பலவகையாக ஆரவாரித்து வந்த, இயற்கையான மறத்தினை உடையவரான காஞ்சிமறவர்து அம்பு மழையினைப்பொறாவாய், வெருண்டு, இன்று, தினையரிந்த தாளினையுடைய மலைகள் ஒத்தனவே! - இது, காஞ்சி மறவரின் பெரிதான ஆற்றலினைக் கண்டவர் வியந்து கூறியது. வெல்களிறு எல்லாம், மறவர் கணைமாரியைப் பொறாவாய் அஞ்சிப் புறமிட்டு இருவி வரை போன்ற வாயின. என்பதைக் கவனிக்க. 'அம்புகள் தைக்கப் பெற்று வீழ்ந்து கிடக்கின்ற யானைகள், தினையரிதாளினைக் கொண்ட மலைபோன்று தோன்றின என்னும் உவமை, காஞ்சி மறவரது பெருங்காஞ்சி நிலையைக் குறித்ததும் காண்க - 6. வாள் செலவு அருமுனையான் அறைகூவினபின் செருமுனைமேல் வாள்சென்றன்று.