பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- usuia கேசிகன் காஞ்சிப்படலம் - 65 பொருதற்கான நாளினை அறுதியிட்டான் இலாஞ்சினை செறித்த ஒலையினைப் பகைவற்மேற் போகவென்று அனுப்பினான்; அதன்பின், தன் படைவீரரைக் கூட்டிக் கொற்றக் குடையினையும் நல்லநாளிலே புறவீடு விட்டான். தம்முனை என்பது, இருவேந்தரும் தமக்குள் நேராகப் - பொருதுகின்ற பூசல். பொறி இலாஞ்சினை. வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து (சிலம்பு 5; 92.2) என வருவதும் இதனை வலியுறுத்தும்.'கூட்டி' என்பதற்கு,'முரசொடுங் கூட்டி' எனவும் உரைப்பர். - 8. வஞ்சினக் காஞ்சி வெஞ்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப வஞ்சினங் கூறிய வகைமொழிந்தன்று. வெவ்வியசினத்தைக்கொண்டோனான காஞ்சிவேந்தன்,தன் நாட்டின்மேற் படையொடுவந்த மாற்றாரைப் பணிவித்தலின் பொருட்டு, வஞ்சினம் கூறிய கூறுபாட்டினைச் சொல்வது, வஞ்சினக் காஞ்சி ஆகும். - - இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின்-என்றும் அரண்அவியப் பாயும் அடையார்முன் நிற்பேன் முரண்அவிய முன்முன் மொழிந்து. - 69 இன்று பகலோன் படுவதன் முன்பாகவே யான் பகைவரை வென்று களங்கொள்வேன்; அங்ங்னம் வென்று களங்கொள்ளாதபடி, யான் என் வேலினை உயர்ப்பேனாயின், என் அரண் அழியுமாறு பாய்ந்துவரும் பகைவரின் முன்பாக, எனது மாறுபாடு கெட, முன்னே முன்னே பணிவான சொற்களைச் சொல்ல, எந்நாளும் வணங்கி நிற்பேனாகுக! இதனால், காஞ்சியான் வஞ்சினம் உரைத்தல் காண்க. வஞ்சினமாவது, இன்னது பிழைப்பின் இன்னவாறாகக் கடவேன்' எனக் கூறுதல்; (தொல்-புறத்24). இதனால், சொல்வானது மறமாண்பும் மானவுயர்ச்சியும் குறிக்கோளது செப்பமும் புலனாகும். 9. பூக்கோள் நிலை கார் எதிரிய கடற்றானை போர் எதிரிய பூக்கொண் டன்று. கார்மேகத்தை எதிர்ப்பட்ட கடலினைப்போல ஆரவாரித்து. எழுகின்ற காஞ்சி மன்னனின் படையானது. வந்து நேர்ந்த