பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - - புறப்பொருள் வெண்பாமாலை ഴു உரையும் இரு சாராரும் தம்முள் மண்டிச்செய்கின்ற போரினுள், மாறுபடாத வலிமையினைக் காட்டிவீழ்ந்திறந்து கிடக்கின்றதன் கணவனின் தலையினொடு, திரண்ட வளையணிந்த அவன் மனையியும், தன் உயிர்முடித்துக் கிடந்ததை உரைப்பது, தலையொடு முடிதல் ஆகும். முடிதல்-உயிர் முடிதல் இறத்தல் கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன் தலையானாள் தையலாள் கண்டே-முலையால் முயங்கினாள் வாண்முகஞ் சேர்ந்தினாள் ஆங்கே உயங்கினாள் ஓங்கிற் றுயிர். 73 இத் தையலாள், தன் கொழுநனது தலையினை அமையாத வளாகப் பார்த்தாள்; தன் முலைகளோடும் எடுத்து அணைத்துத் தழுவினாள்; ஒளிசிறந்த தன் முகத்தோடும் சேர்த்துக் கொண்டாள்; அவ்விடத்தே, அந்நிலைக்கு மிகவும் வருந்தினாள்; அவ்வளவில், அவளுடைய உயிரும் அவ்விடத்தேயே போய்விட்டதுகொலைத்தொழிலை அமையாத கூற்றம் மிகவும் கொடுமை உடையதே! - 'உயக்கம்' அவன் உயர் தன்னுயிரைப் பிரிந்து முற்படப் போயினமைக்கு நெஞ்சழிந்து அவள் வருந்திய வருத்தம். மறத்தியது கற்புச் செறிவினைக் கண்டார், மறவனது மறச் செவ்வியையும் நினைந்து இவ்வாறு கூறினர். காஞ்சி மறவனது மனையாளாதலால், போர்க்களம் ஊரை அணித்தான இடத்தையே அமைதலால், இது நேர்வதாயிற்று. ~ 13. மறக் காஞ்சி-1 இலைப்பொலிதார் இகல்வேந்தன் மலைப்பொழிய மறங்கடைஇயன்று. பச்சிலையினாலேபொலிவுபெற்ற மாலையாற் சிறந்தவனும், மாறுபாட்டை உடையவனுமான காஞ்சி வேந்தன், பகைவரது போர்ச்செயல் நீங்குமாறு, தன் மறத்தொழிலைச் செலுத்தியது, மறக்காஞ்சி எனப்படும். - - - மலைப்பு:போர். ஒழிய,நீங்க, அதாவது வஞ்சியார் கெட்டழிய, மறம்-பேராண்மை. கடைஇயன்று-செலுத்தியது. காஞ்சியானின் மறமாண்பு உரைத்தல் மறக்காஞ்சி ஆயிற்று. கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப் பருந்தோடெருவை படர-அருந்திறல் - வேறாய மன்னர் வியப்பக் கடாயினான் - மாறா மறவன் மறம். - 74