பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வாழ விரும்பாது புண்கிறித்து உயிர்விட்டுச் சிறப்புற்றதால் மறக்காஞ்சி ஆயிற்று. - 15. பேய் நிலை செருவேலோன் திறம்நோக்கிப் பிரிவின்றிப் பேயோம்பின்று. போரினைச் செய்த Gលសំនាយនាយ மறவன், விழுப்புண் பட்டுக் கிடந்த திறப்பாட்டைக் கண்டு, பேய் ஒன்று, அவனை விட்டு அகலாதிருந்து பாதுகாத்தலை உரைப்பது, பேய் நிலை ஆகும். ஆயும் அடுதிறலாற் கன்பிலாரில்போலும் தோயும் கதழ்குருதி தோள்புடைப்பப்-பேயும் களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான் உளம்புகல ஓம்பலுறும். - 76 நிலமெல்லாம் நனைய விரைந்த குருதியானது தோளிலே அலைப்பக் களத்திலுள்ளார் விரும்புமாறு வெகுண்டு போர் செய்து, பகைவரது கதிர்த்த வேல்வாய்ப்பட்டு வீழ்ந்து கிடந்த மறவனை, அவன் உள்ளம் மகிழுமாறு, பேயும் அருகிருந்து காவல் காத்திருக்கும். பலரும் கொண்டாடும் போரடுதலிலே திறப்பாடுகொண்ட இம் மறவனுக்கு, அன்பில்லாதவர் எவரும் இல்லைபோலும்! - பேயும் அன்புகாட்டி ஒம்புதலைக் கூறுதலால், இது பேய் நிலைத் துறை ஆயிற்று. கதிர்வேல்-ஒளிவிடும் வேலும் ஆம் 'ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஒம்பிய பேஎய்ப் பக்கமும் (புறத்-24) எனத் தொல்காப்பியம் இதனை உரைக்கும். களத்து வீழ்ந்தாரின் உடலையுண்டு களித்தலை விரும்பித் திரிவதான பேயும், அவனுடைய மறமாண்பினை வியந்து, அவனுடற்குத் தீது நேராதபடி காத்துநின்றது என்க. . 16. பேய்க் காஞ்சி பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தாற்கு அணங் காற்ற அச்சுறீஇயன்று. பிணங்கள்மிகுந்தபோர்க்ளத்திலேவிழுப்புண்பட்டுவீழ்ந்து கிடந்த ஒரு மறவனுக்குப்பேயானது, மிகவும் அச்சமுறுத்தியதனை உரைப்பது, பேய்க் காஞ்சி ஆகும். பேய் மிகுதியாக அச்சுறுத்த முயன்றாலும், வீரன் அஞ்சானாகி அழல நோக்குவான்’ என்பதனையும் இவ்விடத்தே கருத்திற் கொள்ளல் வேண்டும். - -