பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 21. ஆஞ்சிக் காஞ்சி-1 காதற் கணவனொடு கனையெரி மூழ்கும் மாதர்மெல்லியலின் மலிபுரைத் தன்று. அன்பினையுடையதன் கணவனொடு,முழங்கும் எரியிடத்தே மூழ்கியவளாகத் தன் உயிரையும் அவனுடனே சேர்க்கின்ற, காதன்மிகுந்த மெல்லியலாளினது மேம்பாட்டைக் கண்டோர் உரைப்பது, ஆஞ்சிக் காஞ்சியாகும். கனையெரி மூழ்கும் அவளது செயல், பிறரால் அச்சத்துடன் போற்றத்தகும் செயலாதலின், ஆஞ்சிக் காஞ்சி ஆயிற்று அஞ்சிஆஞ்சியென முதல் நீண்டது. . . தாங்கிய கேளொடு தானும் எரிபுகப் - பூங்குழையாயம் புலர்கென்னும்-நீங்கா விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறுர்ப் - புலாழித் தலைக்கொண்ட புண். 82 ஒழியாத வாய்நுரையினையுடைய குதிரைகளாற் பொலிந்த படையினையும், வெவ்விய வலியினையும் உடையவரான பகைவர்கள், தன்னுடைய சிற்றுாரிடத்தே வந்து, புலால் நாற்றத்தையுடைய சக்கரப் படையினாலே எறிய, அதனால் மார்பிற்பட்ட புண்ணினைத் தாங்கியிருக்கும் தன் கணவனொடு தானும் எரியிடத்தே புகுதலைக் கருதிப், பொலிவான மகரக் குழையினை உடையவளான அவன் மனைவி, தன் தோழியரை அகலப்போமின் என்பாள். - விலாழி-குதிரையின் வாய் நுரை. தோழியரை அகலப் போமின் என்றது, அவர் அவளுடல் வெந்து கருகுதலைப் பொறாதாராய் அச்சமுற்று நலிவர் என்பதனாலாம். - 22. ஆஞ்சிக் காஞ்சி-2 மன்னுயிர் நீத்த வேலின் மனையோள் இன்னுயிர் நீப்பினும் அத்துறையாகும். தன் தலைவன் உயிரைப்போக்கின. அந்த வேலினாலேயே • ‘ அவன் மனையோள், தன் இன்னுயிரைப் போக்கிக் கொள்ளினும், அது ஆஞ்சிக் காஞ்சி ஆகும். - கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை - வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன்-அவ்வேலே அம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற் - - கொம்பிற்கு மாயிற்றே கூற்று. - 83