பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 5. நொச்சிப் படலம் (காஞ்சித் திணை, தன் நாட்டின்மேற் படைகொண்டு வந்து தாக்கிய வஞ்சிவேந்தனை வெற்றிகொண்டு, தன் நாட்டைக் காத்தலின் பொருட்டாக, அந் நாட்டு மன்னன் காஞ்சிப் பூச்சூடிப் போரிடல் பற்றிய செய்திகளை உரைத்தது, இந்த நொச்சிப் படலமும் அங்ங்னம் பகைவேந்தனின் தாக்குதலுக்கு எதிர்த்து நிற்பதுதான். என்றாலும், இது அரணகத்தே இருக்கும் மறவர்கள், தாம்நொச்சிப்பூச்சூடி, அரணினைமுற்றியிருப்பாரது*(*அரணை முற்றுவாரது கூறுபாடுகளை உரைப்பது உழிஞைத்திணை எனப் பின்னர் வரும்.) தாக்குதலைத் தாங்கி, அவரை வென்று, தம் அரணிடத்தைக் காத்துக் கொள்வது ஆகும். இந்த அடிப்படையை மனத்தகத்தே கொண்டே இந்தப்பகுதியை நாம் கற்றல் வேண்டும்) நுவலரும் காப்பின் நொச்சியேனை மறனுடைப் பாசி ஊர்ச்செரு என்றா செருவிடை வீழ்தல் திண்பரி மறனே எயிலது போரே எயில்தனை அழித்தல் - அழிபடை தாங்கல் மகள்மறுத்து மொழிதல்என எச்சமின்றி எண்ணிய ஒன்பதும் . நொச்சித்திணையுந்துறையும் ஆகும். (5) நொச்சித் திணையும் அதன்துறைகளும் பற்றிக் கூறுவது இச் சூத்திரம் நொச்சித் திணையும்; மறனுடைப் பாசி, ஊர்ச்செரு, செருவிடை வீழ்தல், குதிரை மறன், எயிற்போர் எயில்தனை அழித்தல், அழிபடை தாங்கல், மகண் மறுத்து மொழிதல் ஆகியவாகச் சொல்லப்பட்ட எட்டுத் துறைகளுமாக வரும் ஒன்பதும் இத்திணையும் இதன் துறைகளும் ஆம். . . நொச்சித் திணையின் விளக்கம் ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர்சூடிய பூப்புகழ்ந்தன்று. ஏவறையை உடைய முடக்குகளைத் தாங்கின நிலைமையினையுடைய எயிலினைக், காக்கும் வீரர் சூடிக் கொண்ட நொச்சிப் பூவினது சிறப்பினைப் புகழ்வது, நொச்சித் திணை ஆகும். -