பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Helgië csásd * நொச்சிப்படலம் 79 'எயில் காத்தல் நொச்சித் திணை என்பது கருத்து. தொல்காப்பியர் இதனையும் உழிஞையுள் சேர்ந்ததாகவே கொள்வர்.முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும், அனைநெறி மரபிற்று ஆகும் என்ப' என்பது அவரது சூத்திரம் (புறத் 10) உழிஞையும் நொச்சியும் தம்முள் மாறே என்ற பன்னிருபடல. விதியையொட்டி அமைந்தது இந்நூல். . வெட்சியுள் கூறப்பட்டபுறத்திறை என்பது, காட்டரணைப் பகைவர் வளைத்துக் கொள்வது. இதுவோ பாதுகாவற்குரிய நுட்பமான ஏற்பாடுகள் பலவற்றையும் உடைத்தாயிருக்கும், மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுள் அமைந்த அருமதிலினை, உழிஞையார் முற்றியிருப்ப, அதனைக் காத்து நிற்கும் தன்மையை உரைப்பது வஞ்சியானுக்கு எதிர்சென்ற காஞ்சியான் தோற்றுத் தன் அரணிடத்தே சென்றிருத்தலும், வஞ்சியான் உழிஞை மேற்கொண்டு முற்றியிருப்பக், காஞ்சியான் நொச்சி சூடிக் காத்தலும், இத் திணையின் ஒழுக்கமாகவே கருதப்படும். - . ஆடரவம் பூண்டான் அழலுணச்சீறிய கூடரணங் காப்போர் குழாம்புரையைச் - சூடினார் உச்சி மதிவழங்கும் ஓங்கு மதில்காப்பான் - நொச்சி துதிவேலவர். . . . . . 86 நுனையாற் சிறந்த வேலினை உடையவரான மறவர்கள், தனது உச்சியின்கண்ணே மதியமானது ஊரும்படியாக உயர்ந்த அரணிடத்தைக் காவல் செய்வான் வேண்டி, ஆடும் பாம்பாபரணத்தைப் பூண்டானான சிவபிரான் அழலுண்ணு மாறு சினந்த, திரிபுரத்தைக் காப்போரான அவுணர்குழாத்தைப் போலத் திரண்டவராக, நொச்சிப் பூவினைச்சூடிக் கொண்டனர். நொச்சியாரது போராண்மையும், எயிலைக் காப்பதனிடத்து அவர் கொண்டிருந்த உறுதிப்பாடும் இதனால் விளங்கும். நொச்சித் திணையின் துறைகள் . 1. மறனுடைப் பாசி மறப்படை மறவேந்தர் துறக்கத்துச்செலவுரைத்தன்று. மறத் தகைமையினையுடைய படைமறவர்களது தலைவரா - யினாரான மறவேந்தர், உழிஞை மறவரொடு பொருது வீரசுவர்க்கத்துச் சென்ற போக்கினை உரைப்பது, மறனுடைப் பாசி ஆகும். . .