பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும் ஏயின்ார் ஏய இகல்மறவர் - ஆயினார் ஒன்றியவரற ஊர்ப்புலத்துத் தார்தாங்கி - வென்றி அமரர் விருந்து. . . 87 அரணைச் சூழப் பரந்திருந்த உழிஞையார் மாயும் வகையினாற் பலவாகிய காப்பும் அவர்மேல் ஏவினார். அங்ங்னம் ஏவிய மாறுபாட்டையுடைய நொச்சி மறவர்கள், அதன்பின் வெளிப் போந்து, எதிரதாகக் கிட்டினவர் அழியும்படி வெட்டி வீழ்த்தியவாறே, ஊரிடத்து வந்து கொண்டிருந்த பகைவரது தூசிப்படையினைத் தடுத்துப் போரிட்டு, அப்போரிடையே வெற்றியினையுடைய அமரர்கட்கு விருந்தாகவும் ஆயினார். நொச்சியாரது போராண்மையினையும், தம்முயிர் கொடுத்தேனும் தம் அரணைக் காக்க முந்துகின்ற தறுகண்மையினையும் கண்டவர், இவ்வாறு கூறினார். நீர்ப்பாசி போன்று நீங்காது படர்ந்திருந்த உழிஞைப் படையினரைக் கலக்கிய மறமாண்பினைக் கூறுதலாலும், அவர் தம்முள் பாசிபோல ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலானும், இது மறனுடைப் பாசி ஆயிற்று. - 2. ஊர்ச் செரு அருமிளையொடு கிடங்கழியாமைச் செருமலைந்த சிறப்புரைத்தன்று. பகைவரால் புகுதற்கரிதான காவற் காட்டினோடு, அதனையடுத்திருந்த அகழியும் அவராற் சிதைவுறாமற்படிக்கு, நொச்சிமறவர் போர்செய்த சிறப்பினை உரைப்பது, ஊர்ச் செரு ஆகும். அரணின் புறத்தேயுள்ள ஊர்க்கண் இப்போர் நிகழுதலால் 'ஊர்ச்செரு ஆயிற்று. இதனை, ஊர்ச்செரு வீழ்ந்த மறன் எனத் தொல்காப்பியர் உரைப்பர் (புறத்சூ.13). வளையும் வயிரும் ஒலிப்பவாள் வீசி இளையும் கிடங்கும் சிதையத் - தளைபரிந்த நோனார் படையிரிய நொச்சி விறன்மறவர் ஆனார் அமர்விலக்கி யார்ப்பு. 88 நொச்சி சூடியோரான வெற்றியையுடைய மறவர்கள்,சங்கும் கொம்பும் ஒலிமுழங்கத்தம் வாளினை வீசியவராகக் காவற்காடும் அகழியும் சிதையுமாறு காவற்கட்டினை அழித்த பகைவரது படை கெட்டோடுமாறு போரை விலக்கி ஆரவாரித்தலை ஒழியாதாராயினர். - - -