பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 புற்று கன் இருண்டன. என் கண் எதிரில், என் ஊரில், வயந் புறத்தில், மரத்தடியில் புற்று எழுந்தது- என்னுள் ஏதோ சிறி எழுந்தது. ' என்னடா முழிச்சுப் பாக்கறே, சுட்டெரிச்சுட றரப்போல! நல்ல பாம்புப் பார்வை! நீ பாம்பாயிருக் தால், உனக்கு ராஜா மூங்கில் தடி இருக்குன்னு தெரியுமா? 'வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று அப்பொழுதே தோன்றிவிட்டது. சமையல் வேலை முடிந்து விட்டது. சாப்பாட்டிற்குக் கொஞ்ச நேரமிருந்தது. காற்று வாங்கவும், குளிக்கவும், உடை மாற்றவும் பரிசாரகர்கள் வெளியே போனார்கள், ஆனால் நான் மாத்திரம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவமானம் தாங்காமல் மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கேலிச் சிரிப்பு இன்னமும் காதில் ஒலித்தது. “ என்ன பண்ணறே, இருட்டில் உட்கார்த்துண்டு: உடுத்திக்கப் போகல்லே?" 'என் முதலாளிதான்; கருவேப்பிலைக் கொத்தை அண்டா ரசத்தில் உருவி உதிர்த்துக் கொண்டு, ஏதோ சொன்னான். அவன் குரலில் இப்பொழுது கோய மில்லை. -

  • எந்தத் தொழிலிலும் ஒண்னு தெரிஞ்சிக்கனும்: தெரியா விட்டால் அதைக் கத்துக்கற வழியைப் பார்க் கனுமே தவிர, ஏமாத்கற வித்தை கூடாது. இன்னொண்ணு என்னன்னா, பண்ணின தவறுக்குத் தண்டனை யடைஞ்சப்புறம் அத்தோடு அது போச்சு. அப்புறம் மேல் காரியத்தை ஒட்டனும். மாத்திரம் இந்தத் திருட்டுப் புத்தியை யெல்லாம் விட்டுட்டுத்