பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புற்று “ஒவ்வொருவருக்கும் ஊற்றிக்கொண்டு வருகையில் அவர்கள் வாயில் வைத்ததும் அவரவர் முகங்கள் விதவித மாய் ஆச்சரியமும், அசடும் வழிய, தாக்கி வாரிப் போட்டாற்போல் சவுங்கி, சொல்லவும் முடியாமல் மெல்ல வும் முடியாமல் சவுங்குவதைக் காண்கையில் உள்ளுற ஆனந்தம் பொங்கியது. “ஓ Damn. இதென்ன, பாயசம் உப்புக் கரிக்கிறதுஎன்று வீட்டு எஜமான் கத்தினார். நேரே என் பார்வை, பின்னால் கை கட்டிக் கொண்டு பக்தி நடுவில் கின்று கொண்டு மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் என் முதலாளி மேல் பாய்ந்தது. நான் அவனைப் பார்த்ததை அவள் பார்த்து விட்டாள். பக் கென்று அந்தப் பெண் வாய் விட்டுச் சிரித்துவிட்டாள். என் முதலாளி திகைத்து கின்றான். ‘'சிரிப்பு என்ன வேண்டியிருக்கு-பார்ட்டி குட்டிச் சுவராப் பேச்சே-சமையல்காரன் யார்’ என்று அவள் தகப்பனார் கர்ஜித்தார்.

  • இதில் ஒரு திேயிருக்கு, Papal! ஒரு கரண்டி எண்ணெய் ஒரு படி உப்பில் கொண்டுபோய் விட்டு விடும்

இது என்ன புதிர்?" "அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே 'இல்லை; இது எனக்கும் இங்கே இன்னும் ரெண்டு பேருக்கும் தான் புரியும்-இது ஒரு பெரிய தமாஷ்!" என்றாள். அவள் வார்த்தைகளின் அர்த்தம் என் எஜமான் மண்டையில் ஊறுகையில் அவன் முகம் மாவாய்ப் பிசைந்தது. ஒசைப்படாமல் கழுவினேன். எங்கள் விடுதிக்கு