பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வா. ச. ரா. 91 ஓடினேன். மறு சொக்காயையும் வேஷ்டியையும் அவசர அவசரமாய்க் கைப்பையில் திணித்தேன். அவன் கண்ணில் படுமுன் கிளம்பியாக வேண்டும்! பையைத் தூக்கிக்கொண்டு திரும்புகையில் வாசற்படியில் நிழல் தட்டியது. அவள் கின்று கொண்டிருந்தாள்! 奚< 'ஒ' -நான் பின்னடைந்தேன். என்னை நோக்கி இரண்டடி வைத்தாள். எங்கே அவ்வளவு அவசரம்?-அவள் வாயின் வார்ப்பே சிரிப்பா? - வேடிக்கையை மெளனமாய் அனுபவிக்க முடியாமல், t தான் புத்திசாலி மாதிரி, அர்த்தத்தையும் விளக்கி விட்ட தால், நான் மறுபடியும் என் எஜமானிடம் வேலைபார்க்க முடியாதபடி பண்ணி விட்டாய். உன்னாலான உபகாரம்' இதானே? என் வீட்டுக்கு ஒரு ஆள் தேவையா யிருக்கிறது. அப்பாகிட்டே சொல்லி உன்னை வைக்கச் சொல்லுகிறேன். ஒடிப்போய் விடாதே. இருந்தாலும் ே பண்ணின வேலையை சினைக்க கினைக்கச் சிரிப்பு தாங்க முடியவில்லை- அடேயப்பா ! என்ன கெஞ்சுக் கணம் உனக்கு! 'என் பையைப் பிடுங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே போனாள். 'கான் அங்கேயே கின்றுகொண்டிருந்தேன். ஆனால் நான் அங்கு இல்லை. வயற்புறத்தில், மரத்தடியில், புற்றெதிரில் கின்று கொண்டிருந்தேன். புற்றுகாகம் சட்டையுரித்துக் கொண்டிருந்தது. மினுமினுக்கும் புத்துடம் புடன் பழஞ்சட்டையினின்றும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.' 米 谤 לי