பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§3 4ற்று "அங்கு கான் கொஞ்ச காள் வேலை பார்த்தேன். வேலையொன்றும் கிடையாது. செலவுக்கு மீறிய காசு கையில் இருந்ததும், செல்லப் பெண்ணும் தான் என்னை வேலையில் வைத்துக் கொண்ட காரணமேயன்றி, வேலைக் காக என்றல்ல. சுகமாய்க் காலத்தைக் கழித்தேன். கிறைய அவகாசமிருந்தது. என் இஷ்டப்படி வெளியில் சுற்றினேன். “ஒரு தடவை தெருவில் போய்க் கொண்டிருக்கையில் என் மேலேயே ஏறிவிடுவது போல் என் பின்னால் ஒரு கார் வந்து 'சடக்கென்று சின்றது. அவள் மாத்திரம் உட்கார்ந்துகொண்டிருந்தாள், சிரித்த வண்ணம். அவள் தான் ஒட்டிக்கொண்டிருந்தாள். அவள் மேலிருந்து வீசும் வாசனையில் எனக்கு மயக்கம்கூட உண்டாயிற்று. பென்ஸிலால் வெகு ஜாக்கிரதையாகத் தீட்டியிருந்த புருவங்கள் வெகு ஒழுங்காய் வளைந்திருந்தன. உதடுகள் முகத்தில் முளைத்த இரத்தப் பூவாய்த்தானிருந்தன. ஏறி உட்கார்-பின்னால் இல்லை; இங்கே - கிட்டl' - . . . . "முழு வேகத்தில் பறந்தோம். கடைகளும், வீடுகளும், தூரத்தில் பங்களாக்களும், பிறகு வெறும் மரங்களும் வரிசை வரிசையாய் எங்கள் இருமருங்கிலும் பறந்தன. அந்தி சூரியன் வானத்தை இரத்த விளாறாக்கிக் கொண்டி ருந்தான். அதைச் சற்று கேரம் பார்த்துக் கொண்டிருந்து. விட்டுப் பிறகு சுற்றுமுற்றும் நோக்குகையில் காங்கள் கடற்கரையில் ஒரு ஒதுக்கிடத்துக்கு வந்திருந்தோம். சட்டெனக் காரை கிறுத்தினாள். அப்படியே சற்றுநேரம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள், புன் சிசிப்புடன். - உம்- நன்றாய்த்தானிருக்கிறாய்- இந்தச் சந்தனக் கலர் ஜிப்பா உனக்கு ஒத்துத்தானிருக்கிறது