பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6cmm・学・ rm・ 93 "எவ்வளவு உண்மையா யிருந்தாலும்கூட நேர்ப் புகழ்ச்சி, லஜ்ஜையைத்தான் உண்டாக்குகிறது. அதுவும் இம்மாதிரிப் புகழ்ச்சியால் அருவருப்புத்தான் தட்டுகிறது. நான் வானத்தைப் பார்த்துக் கொண்டே-நேரமாய் விட்டாப்போலிருக்கிறதே, திரும்பலாமா?- என்று கேட்டேன். 'சின்னக் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கிக் கொண்டே, இப்பத்தானே வந்தோம். என்ன அவசரம்? இந்த இடம் ஜோராயில்லே?" என்று கேட்டுக்கொண்டே என்மேல் சாய்ந்தாள். அவள் குரல் வெறும் மூச்சாகவே ஒடுங்கிப் போயிற்று. உடுக்கு அடித்து ஆவேசத்தை வர வழைத்துக் கொள்பவன்போல இமைகள் அரைக்கண் மூடி, விழிகளின் ஒளி மங்கிப் படலம் படர்ந்தது. “ ஒஹோ!' "கெட்டிபோல் கனமில்லாமல்தானிருந்தாள். கழுத் தில் இரட்டைவடச் சங்கிலிகள் இரண்டும், ஒரு வைரச் சங்கிலியும் மின்னின. ஒவ்வொரு கையிலும் இரண்டு ஜோடி தங்க வளையல்கள். அவைகளைத் தொட்டுக் கொண்டே நான்-ஏது கையின் அளளவவிடப் பெரிதா யிருக்கிறதே! என்றேன். ‘'சிரித்துக்கொண்டே அதுதான் இப்பொழுது பாஷன்” என்றாள் அவள். நான் அவள் பார்வையைச் சந்திக்காமலே உனக்கும் எனக்கும் அந்தஸ்தில் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியுமோ?-'என்றேன். இருந்தால் என்ன?” " அப்படியானால் உன் தகப்பனார் இப்படி உன்னை யும் என்னையும் பார்க்கச் சம்மதிப்பாரா?