பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9ğ புற்று. " அநேக ஆசீர்வாதம், அல்லது நமஸ்காரம்-அல்லது கடிதத்தை ஆரம்பிக்க எதுவோ, அது.

  • நீ எவ்வளவு சாமார்த்தியசாலியா யிருப்பினும், எப்படியும் t என்னைவிட மூத்தவள் தான் என்று தோன்றுகிறது. உன் வயதை மறைக்க நீ படும்பாடும், கிரந்தர இளமையாக நீயே உனக்கு த் தோன்றுவதற்காக, உன்னையே ஏமாற்றிக் கொள்வதற்காக, தனியாக நடை யுடை பாவனைகளையும், திரிசங்கு சுவர்க்கத்தையும் : சிருஷ்டித்துக்கொள்வதிலிருந்து, நீ உனக்கு ஒப்புக்கொள்ளா விட்டாலும், உனக்கே தெரியும். அதில் உன்னுடைய செளகரியத்திற்காக எனக்குக் கொடுத்திருக்கும் அல்லது கொடுக்கப் பார்க்கும் வேஷமும் எனக்குத் தெரிகிறது.
  • மிருகங்கள் பசி வேளைக்கும், தற்காப்புக்கும் தான் ஒன்றை யொன்று அழித்துக்கொள்கின்றன. மற்றப் பொழுதில் ஒன்றையொன்று, வேறு காரணங்களாகப் பயன்படுத்திக் கொள்ளும் குணம் அவைகளுக்குக் கிடை யாது. இந்தக்கெட்ட குணம் மனித ஜன்மத்துக்குத்தான் இருக்கிறது. மன்னிக்க முடியாத குணம்.
  • அன்றைக்குச் சமையலறையில் அடிப்பட்டு விழுக் திருக்கும் என்னைப் பார்த்து நீ சிரித்தபொழுதே நீ என்னை ஒரு புதுப்பொம்மையாக கருதினாய் என்று கண்டுகொண் டேன். உடனே அந்தப் பொம்மை வேண்டுமென்று ஆசைப் பட்டாய். வாங்கவும் வாங்கினாய். உடனே அதையுடைத்து அதில் என்ன வேலைப்பாடுகள் இருக்கின்றன என்று ஆராயவேண்டும் என்றுகூட உனக்குத் தோன்றி விட்டது. எல்லாமே உனக்கு விளையாட்டுத்தானே; இந்தப்பொம்மை உடைந்து போனால் இன்னொரு பொம்மை.........

'விளையாட்டுப் பொம்மையாக எந்த ஆணும் மன மாரச் சம்மதியான். இதைவிடப் பெருந்தீங்கு பெண்கள்