பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ga)f。 gF。女”序。 103 ஓடினாள். அவள் ஒடுவது வெகு அழகாயிருந்தது. அதற்கப் புறம் அவள் வழிக்கு நான் போகவில்லை. ஆனால் அவள் தீர்மானமாய் என்னை ஒதுக்கினாள். அவள் மனத்தில் இடம் கொடுத்துவிட்டாள் என்றாலும், அதற்கு மேல் அவளுக்குப் பயம்! 'பக்கத்துாரில் ஒரு பையனுக்கும் அவளுக்கும் கலியாணம் கடந்து, அவள் புக்ககம் போய்விட்டாள். பிறந்த வீடு கிட்ட இருப்பதால் அடிக்கடி வந்து போவாள். நான் ஊரைவிட்டுப் போவதற்கு முன் ஒரு குழந்தையைக் கூடப் பெற்றெடுத்துவிட்டாள். அவள் மணவாழ்க்கை மிகச் சந்தோஷமாயிருந்தது என்று அவள் உடற் பொலிவி லும், முகமலர்ச்சியிலும் தெளிந்தது. 'இப்பொழுது திடீரென்று அவள் கினைவு வந்தது. எல்லாவற்றையும் விழுங்கியபிறகு அவள் ஒரு எட்டாப் பழமாய் எனக்குத் தோன்றினாள். உடனே அதைப் பறித்து ஆகவேண்டும் எனக்கு. அதனால் இங்கு வந்தேன்.'" எப்படிப் பறிப்பதாய் உன் எண்ணம்?" "அதை இப்பொழுது எப்படிச் சொல்ல முடியும்? தனியாய்ச் சந்திக்க முயன்றிருப்பேன். அவள் சம்மதிக்கா விட்டால், அவள் கணவனுக்கெதிரில் உன்னை அன்று, குளக்கரையில் நாகப் பிரதிஷ்டைக் கெதிரில் கையைப் பிடித் தேனே, எப்படி?- என்று கேட்டு, அவள் புருஷனுக்குச் சந்தேகத்தை உண்டாக்கி யிருப்பேன். சமயத்துக்குத் தக்க வாறு கடந்து கொண்டிருப்பேன். இப்பொழுது எப்படி சொல்வது?’ "மொத்தத்தில் அவள் வாழ்க்கையைக் குலைத்திருப் பாய் அல்லவா?’’ 'ஆம்- என்றான் வசியங்கண்டவன்போல்; நினைவு மங்க ஆரம்பித்துவிட்டது.