பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாற்கடல் சுமார் முப்பது வருடங்களுக்குமுன் ஒரு தீபாவளி மலரில் இந்தக் கதை வெளிவந்ததும் இது அடைந்த பிரபலம் ஒருபக்கம் இருக்கட்டும். இதில் விவரிக்கப்படும் கூட்டுக் குடும்பம் என்ற ஸ்தாபனமே இப்போது முறிந்து போய் ..? & ஆயிற்று. கணவன் மனைவி இருவரும் தனித்தனி இடங்களில் வேலைக்குப் போய்க் கொண்டு, வீட்டில் விட்டுச் சென்ற குழந்தை, பக்கத்து வீட்டுப் பாஞ்சாலை, எதிர் வீட்டு எல்லம்மாளின் பொறுப்பிலும் இரக்கத்திலும் எடுப்பார் கைப் பிள்ளையாக வளர்ந்து உருவாகிக் கொண்டும் இந்தத்தலைமுறைக்கு, இந்தக் கதையில் சொல் லப்படும் வாழ்க்கை, வாழ்க்கைமுறை, வெறும் தகவல் ரீதியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு-முக்குணங் களின் சிதர்சனம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை. Dedicated, Benevolent dictatory ship #5 எடுத்துக் காட்டு. The world is a family, one family of man என்பதெல்லாம் பின் வேறு என்ன, கூட்டுக் குடும்பம் அலாது?