j is, பாற்கடல்
உள்ளுற சந்தோஷம். எனக்குத் தெரியும், நான் பரீட்rை யில் ஜெயித்து விட்டேன் என்று. என்ன பரீட்கூைடி? பெண்ணாய்ப் பிறந்தபின் ஸ்வதந்திரம் ஏது என்கிறது தான்.
ஆமாம்; நான் கேட்கிறேன்- இதென்ன உத்தி யோகம், ஒரு நாள் கிழமைக்குக் கூட பெற்றவர் உற்றவர் கூட இல்லாமல்படிக்கு? என்னதான் காம்'பில் கிளம்பிப் போனாலும் சமயத்துக்கு லீவு வாங்கிக்கொண்டு திரும்பிவர முடியாதா?
ஆனால் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குக்தான், என்ன சுதத்திரம் இருக்கிறது? எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப் போனால் யார்தான் விடுதலையாயிருக்கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக்கிறோமே, இந்த உலகத்தில் பணக்காரன் தங்கக் கண்டில். இந்த இரண்டு ஸ்திதியிலுமில்லாமல் நம்மைப்போல் இருக்கிறவர் கள் இதிலுமில்லை; அதிலுமில்லை; காலை ஊன்றக்கூட ஆதாரமில்லாமல், அந்தரத்தில் தவித்துக் கொண்டிருக்கி றோம். இல்லாவிடில் இந்தச்சமயத்தில் நாம் பிரிந்து நீங்கள் எங்கேயோ இருப்பானேன்? கான் ஏங்கி உருகித் தவித்துக் கொண்டு உத்தியோகத்தை உதறிவிட்டு ஓடிவந்துவிட முடிகிறதா? நான் ஒண்னும் அவ்வளவு அசடு இல்லை. மனஸு வெச்சேன்னா எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ மனளா வெச்சிருக்கேன்!
ஆனால் அதற்காக என்னோடு பேசக்கூடாது என்று இருந்ததா? போகிற சமயத்தில் என்னிடம் வந்து, 'ஜகதா, கான் போயிட்டு வரட்டுமா?' என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சிவிவிடுவார்களா? அதையும்தான் பார்த்துவிடுகிறது;
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/123
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
