பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


143 பாற்கடல் லாம் கடைசியில், உலகம் தெரியாமல். எது நிலைச்சுது தெரியாமல், நாயும் பூனையுமா காறிண்டிருக்கிறதை நான் பார்த்துண்டுதானே இருக்கேன்! பையன் நல்ல வேளையா காலாம் பிள்ளையாத்தானே இருக்கான்? என் மாதிரி, என் பெண், வீட்டுக்கு மூத்த நாட்டுப்பெண்ணாய் வாழ்க்கைப் படவேண்டாமே?” அம்மா அப்படிச் சொல்றப்போ கன்னாத்தானிருக்கு; நாவலில் கதாநாயகியாயிருக்க யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்? ஆனால் தனக்கென்று வரப்போத்தானே தெரியறது: கி ஜம்மா நீங்கள் அனறைக்கு ஆதரவாய் எனக்கு ஒரு வார்த்தை கூட இல்லாமல் வண்டியிலேறிப் போயிட்ட பிறகு, எனக்கு அழுகையா வந்துவிட்டது. என் கெஞ்சின் பாரத்தை யாரிடம் கொட்டிக்கொள்வேன்? எல்லாரும் எனக்குப் புதிசு, வாயில் முன்றானை நுனியை அடைச்சுண்டு கிணற்றடிக்கு ஒடிப்போயிட்டேன். எத்தனை காழி அங்கேயே உட்கார்ந்திருந்தேனோ அறியேன். "என்னடி குட்டீ, என்ன பண்ஹே' எனக்குத் தாக்கிப் போட்டது. அம்மா எதிரே கின்னுண்டிருந்தாள். உங்கம்மா செக்கச்செவேல் என்று நெற்றியில் பதக்கம் மாதிரி குங்குமமிட்டுக்கொண்டு கொழ கொழன்னு பசுப்போல் ஒரொரு சமயம் எவ்வளவு அழகா யிருக்கிறார்! "ஒண்னுமில்லையே அம்மா!' என்று அவசரமாய்க் கண்ணைத்துடைத்துக்கொண்டேன். ஆனால் மூக்கை உறிஞ்சாமல் இருக்க முடியவில்லை. 'அடாடா! கடுஞ் ஜலதோஷம். மூக்கையும் கண்ணை யும் கொட்டறதா? ராத்திரி மோர் சேர்த்துக்காதே",