பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@r・ ザ・ f f。 í #3 (கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும்போது, அதுவும் ஒரு அழகாய்த்தானிருக்கிறது) என்னவோ அம்மா, புதுப் பெண்ணாயிருக்கே; உன் உடம்பு எங்களுக்குப் பிடி படறவரைக்கும், உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ-அட; குட்டி இதென்ன இங்கே பாருடி!' அம்மா ஆச்சரியத்துடன் கிணற்றுள் எட்டிப் பார்த் தார். அவசரமாய் நானும் எழுந்து என்னென்று பார்த் தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. "ஏ குட்டி, எனக்குத்தான் கண்சதை மறைக்கிறதா? கிணற்றில் ஐலம் இருக்கா? 'இருக்கிறதே!' 'குறைஞ்சிருக்கா?” 'இல்லையே, கிறைய இருக்கே!' 'இருக்கோன்னோ? அதான் கேட்டேன்; அதான் சொல்ல வந்தேன், கிணற்று ஜலத்தை சமுத்திரம் அடித் துக்கொண்டு போக முடியாதுன்னு! கேரமாச்சு. சுவாமி பிறையின் கீழ் கோலத்தைப் போடு- என்று குஞ்சிரிப் புடன் சொல்லிக் கொண்டே போய்விட்டார். நான் கிணற்றடியிலேயே இன்னும் சற்று நேரம் கின்றிருந்தேன். கெஞ்சில் சின்னதாய் அகல் விளக்கை ஏற்றி வெச்ச மாதிரி யிருந்தது. மேலே மரத்திலிருந்து பவழமல்லி உதிர்ந்து கிணற்றுள் விழுந்து கொண்டிருக் தது. தும்பையறுத்துக்கொண்டு கன்றுக்குட்டி முகத்தை என் கையில் தேய்த்துக் கொண்டிருந்தது. இந்த வீட்டில் யார்தான் பளிச்சென்று பேசுகிறார் கள்? வெளிச்சம் எல்லாம் பேச்சில் இல்லை. அதைத் தாண்டி அதனுள்தான் இருக்கிறது. பா.-8