பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


114 பாற்கடல் ஆனால் ஊமைக்கு மாத்திரம் உணர்ச்சி யில்லையா? அவர்களுக்குத்தான் அதிகம் என்று சொல்லக் கேட்டிருக் கிறேன். ஆனால் நீங்கள் அசல் ஊமையில்லையே, ஊமை மாத்ரிதானே எனக்கு ரெஸ்பெக்டே இல்லை யோன்னோ? ஆமாம், அப்படித்தான். போங்கோ கான் உங்களுக்கு இப்போ கடிதம் எழுதவில்லை. உங்களுடன் கடிதத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லை. கடிதாசி யில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் யோசனை என்னுடையது. அதை யாராலும் தடுக்க முடியாது. என்னாலேயே தடுக்க முடியாதே, நான் என்ன செய்வேன்? கான்தான் அப்பவே சொல்லிவிட்டேனே, என்நெஞ்சிலிருக் கிறதை அப்படியே கொட்டிவிடுவேன் என்று! எனக்கு மாத்திரம் தெரியாதா, நீங்கள் நெஞ்சில் முள் மாட்டிண்ட மாதிரி, கண்டத்தை முழுங்கிண்டு, முகம் நெருப்பாய்க்காய, வாசலுக்கும் உள்ளுக்குமா அலைஞ்சது: அப்போ உங்களுக்கு மாத்திரம் என்னோடு பேச ஆசை யில்லை என்று நான் சொல்ல முடியுமா? அதை நினைத் தால்தான் எனக்குத் துக்கம் இப்போகூட நெஞ்சை அடைக் கிறது. என்ன பேச வேண்டும் என்று கினைத்தீர்களோ? அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லை. இதற்கு முன்னால் நீங்கள் யாரோ, கான் யாரோ? பரதேகிக் கோலத்தில் படி தாண்டி உள்வந்து நீங்கள் என் கை பிடித்ததும் ஜன்மேதி ஜன்மங்கள் காத்திருந்த காரியம் நிறைவேறிவிட்டாற்போல் எனக்குத் தோன்றுவா னேன்? அப்படிக் காத்திருந்த பொருள் கைக்கூடிய பின்னரும், இன்னமும் காத்திருக்கும்பொருளாவே இருப்பானேன்? இன் னமும் ஜன்மங்களின் காரியம் சிறைவேறவில்லையா? இப் பொழுது நெருப்பு என்றால் வாய் வெந்து போய்விடாது. தாலி கட்டின வீட்டில் அடித்து விழுகிறாயே என்று