பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xii எங்கள் கைக்கு வந்து சேரவில்லையே! மறுபதிப்புக்கள் தானே என்று நீங்கள் தயங்கினாலும் எங்கள் தலைமுறை இவைசொல்லும் விஷயங்கள் அத்தனையும் புதிது. 'கொண்டுவாருங்கள், கொடுங்கள்’ என்றுப் பன்னித் தட்டி னால் தான், கதவு திறக்கப்படும். உங்கள் பசியை நீங்கள் தெரிவிக்காமல் அவர்கள் எப்படித் தெரிந்து கொள்வது? அழுத குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும். 'கடைவிரித்தேன் கொள்வோர் யாருமில்லையே” என்னும் நிலை இனிமேலாயினும் நமக்குள் வேண்டாம். என் வழக்கின் ஆரம்பத்திலேயே Spartacus எனும் புத்தகத்தின் கதையைச் சொன்னதே இதற்குத்தான். Plot 242, ஞான மூர்த்தி நகர் ஆசீர்வாதம் அம்பத்துளர் லா. ச. சாமாமிருதம் சென்னை.600 05:3 16, பிப்ரவரி, 1989