பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Gajff, F • sfff • 117 பண்ணிப் பண்ணிப் பழக்கம்! இனிமேல் வளைக்கிற வயசா? வளைத்தால் அவர் டப்' பென முறிஞ்சு போவார். நான் பொத்தைப் பூசனிக்காய், பொட் டென உடைஞ்சு போவேன். காங்கள் இருக்கிற வரைக்கும் நீங்கள் எல்லாம் ஸ்ஹிச்சுண்டு போகவேண்டியதுதான். இந்த மாடியிலிருக் கிற கிழவியை வந்த இடத்துக்குச் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒண்ணு இருக்கு. அப்புறம்-' 'ஏன் அம்மா இப்படியெல்லாம் பேசறேன்?' என்பார் மூத்த ஓர்ப்படி. 'பின்னே என்ன, நாங்கள் இருந்துண்டே யிருந்தால், நீங்கள் உங்கள் இஷ்டப்படி எப்போ இருக்கிறது?’’ 'இப்போ எங்களுக்கு என்னம்மா குறைச்சல்?' அம்மாவுக்கு உள்ளுறச் சக்தோஷக்தான். ஆனால் வெளிக் காண்பித்துக் கொள்ளமாட்டார். "அது சரிதாண்டி, நீ எல்லோருக்கும் முன்னாலே வந்து ட்டே. பின்னாலே வந்தவாளுக்கெல்லாம் அப்படியிருக்குமோ? ஏன், என் பெண்ணையே எடுத்துக்கோயன்; அவளுக்குக் காலேஜ் குமாரியா விளங்கணும்னு ஆசையாயிருக்கு. இஷ்டப்படி வந்துண்டு போயிண்டு, உடம்பு தெரிய உடுத்திண்டு...நான் ஒருத்திதான் அதுக்கெல்லாம் குக்தகமா யிருக்கேன். அவள் பிறந்ததிலிருந்தே அப்பா உடன் பிறந்தமார் செல்லம். நான் வாயைப் பிளந்தேன்னா முதன் முதலில் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பவள் அவள்தான். என்வயிற்றுப் பிண்டமே இப்படியிருந்தால், வீட்டுக்கு வந்தவா நீங்கள் என்ன என் பேச்சைக் கேட்டுடப்போறேள்?’’ 'இல்லேம்மா, நாங்கள் ங்ேகள் சொன்னத்தைக் கேட்கறோம்மா...' என்று ஏகக் குரலில் பள்ளிப் பையன்