பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ጨ}ffe சி. ᏰᏛff • 138 அம்மா என் பாதங்களைத் தொட்டதும் எனக்கு உடல் பதறிப்போச்சு. என்னம்மா பண்றேள்?' அம்மா கையிலிடப் போறாராக்கும் என்று கினைத்துக்கொண்டி ருந்தேன். ஆனால் என் பேச்சு அம்மாவுக்குக் காது கேட்க வில்லை. என் பாதங்களை எங்கோ கினைவாய் வருடிக் கொண்டிருந்தார். வேலை செய்தும் பூப்போன்று மெத் திட்ட கைகள்; எனக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா திடீரென்று என் பாதங்களைக் கெட்டியாப் பிடித்துக் கொண்டு அவை மேல் குனிந்தார். அவர் தோளும் உடலும் அலைச் சுழல்கள் போல் விதிர்ந்தன. உயர்ந்த வெண் பட்டுப்போல் அவர் கூந்தல் பளபளத்தது. என் பாதங் களின் மேல் இரு அனல் சொட்டுக்கள் உதிர்ந்து பொரிக் தன. - - 'அம்மா! அம்மா!' எனக்கு அழுகை வந்துவிட்டது. அதுவே ஒட்டுவாரொட்டி. எனக்கும் தாங்கிக்கிற மனசு இல்லை. 'ஒண்னுமில்லேடி குட்டி பயப்படாதே." அம்மா மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண் டார்.'எனக்கு என்னவோ கினைப்பு வந்தது. எனக்கு ஒரு பெண் இருந்தாள். முகம் உடல்வாகு எல்லாம் உன் அச்சு தான். இப்போ இருந்தால் உன் வயசுதான் இருப்பாள் என் நெஞ்சை அறிஞ்சவள் அவள்தான். மூணு நாள் ஜூரம், முதல் நாள் மூடிய கண்ணை அப்புறம் திறக்கவேயில்லை. மூளையில் கபம் தங்கிவிட்டதாம். இப்பொத்தான் காலத் திற்கேற்ப வியாதிகள் எல்லாம் புதுப்புது தினுசாய் வரதே! பின்னால் வந்த விபத்தில் அவளை மறந்துவிட்டேன் என்று கினைத்தேன். ஆனால் இப்போத்தான் தெரியறது. உண்மையில் எதுவுமே மறப்பதில்லை. எதுவுமே மறப் பதற்கில்லை. கல்லதோ கெடுதலோ அது அது, சாப்பாட்டின் சத்து ரத்தத்துடன் கலந்துவிடுவதுபோல்,