பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 பாற்கடல் உடலிலேயே கலந்துவிடுகிறது. நாம் மறந்துவிட்டோம் என்று மனப்பால் குடிக்கையில், அடி முட்டாளே! இதே இருக்கிறேன், பார்!’ என்று தலைதுாக்கிக் காண்பிக்கிறது. உண்மையில் அதுவே போகப்போக நம்மைத்தாக்கும் மனோ சக்தியாய்க்கூட விளங்குகிறது. இல்லாவிட்டால் என் மாமியாரும் நானும், எங்களுக்கு நேர்ந்ததெல்லாம் கேர்ந்தபின் இன்னும் ஏன் இந்த உலகத்திலே டிேச்சு இருந் திண்டிருக்கணும்' இதைச் சொல்லிவிட்டு அம்மா அப்புறம் பேசவில்லை. தன்னை அமுக்கிய ஒரு பெரும் பாரத்தை உதறித் தள்ளி னாற் போல் ஒரு பெருமூச்செறிந்தார்; அவ்வளவுதான். என் பாதங்களில் மருதாணி இடுவதில் முனைந்தார். ஆனால் அவர் எனக்கு இடவில்லை. என் உருவத்தில் அவர் கண்ட தன் இறந்த பெண்ணின் பாவனைக்கும் இட வில்லை; எங்கள் இருவரையும் தாண்டி எங்களுக்குப் பொதுவாய் இருந்த இளமைக்கு மருதாணியிட்டு வழி பட்டுக்கோண்டிருந்தார். இந்த சமயத்துக்கு அந்த இளமை யின் சின்னமாய்த்தான் அவருக்கு நான் விளங்கினேன்; எனக்கு அப்படித்தான் தோன்றிற்று. இப்படியெல்லாம் கினைக்கவும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் எனக்கு அப்படித் தோன்றிற்றோ என்னவோ? இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக் கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா-அப்பா, பிறகு காங்கள்-நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் இங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழி பாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே. தோன்றுகிறது. மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளியிருப்பது போல் பாட்டி மூன்றா