பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 பாற்கடல் கடந்து செல்கிறார்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பா விடம் சொல்லிக் கொள்கிறார்: "பரவாயில்லை பெண்ணைப் பெரியவா சின்னவா மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா.” அதனால் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன் நிற்று, அவ்வளவுதான். இந்தச் சமயத்தில் இவர்களை கான் மஸ்கரித்ததால், மேலிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொள்கிறேன். சந்ததியி லிருந்து சந்ததிக்கு இறங்கி வரும் பரம்பரை அருள். எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தைவிடச் சுருக்கவே திரும்பிவருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்”. அப்பாவும் அம்மாவும் மேலேறிச் செல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் சொர்க்க வாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தி யுடன் மெளனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென கிணைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேரவாண்டு ஸ்டுலை வைத்து மேலேறி, மாடி விளக்கின் ஸ்விட்சைப். போடுகிறான். திடீரென மாடிவளைவில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இருபக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய், கீழே இறங்குகிறார்கள். பிறகு பத்திரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாரித் தாக்கிக் கொண்டுபோய் மனைமீது உட்காத்தி வைக்கிறார். அப்பா பிடித்துக்கொண்டிருக்க, அம்மா, பதச்சூட்டில் வெங்ைேர மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத்தடவினாற் போல தேய்க்கிறார். காங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம்.