பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பார்க்கவி இந்தக் கதையைப்பற்றி, வரிக்குவர் ஒரு அலசல் விமர்சனம் சி. சு. செல்லப்பா அவர்கள் தொடராக சுதேசமித்ரன் வாரப்பதிப்பில், மூன்று இதழ்களில் எழுதினார். ஆனால் அதுமட்டும் இந்தக் கதையைப் படிக்க சிபாரிசு ஆகாது என்று அறிவேன். ஆனால், இந்தத் தொகுப்பின் சம்பந்தமாக, முப்பது வருட இடைவெளிக்குப் பின் இந்தக் கதையை மீண்டும் படிக்க நேரிட்ட போது, கலைக்க முடியாத விதியின் கதியே போன்ற, இதன் படிப்படியான முன்னேற்றமும், கதை முடிவில், கதைக்கே முத்தாய்ப்பாக அமையும் இரண்டு வார்த்தைகளும், அவைகளின் எதிர்ப்பாராத தன்மையும் அவைதரும் சாந்த மும்-சாந்தியும் ஐயா, நானே என்மேல் பூப்போட்டுக் கொள் கிறேன் என்கிற குற்றத்தையும் கேலியையும் இந்தக் கதைக்காக ஏற்கத் துணிந்து விட்டேன் என்பதே இந்தக் கதைக்குச் சிபாரிசு. ஒன்று சொல்கிறேன், நம்பினாலும், கம்பாவிடினும். ஒரு கட்டத்தின் பிறகு கதை தானே தன்னைச் சொல்லிக் கொண்டு போகும் வேகத்தில் எல்லாமே சுயப்பிரக்ஞையின் சாதனை அல்ல, பா-1