130 பாற்கடல்
இது கேர்வதற்கு முன்னால் அவள் தான் ரொம்பவும் கல கலப்பாய், எப்பவும் சிரிச்ச முகமாய் இருப்பாளாமே!
இப்போக்கூட, அந்த முகத்தின் அழகு முற்றிலும் அழியவில்லை. அவள் சீற்றம் எல்லாம் அவள் மேலேயே சாய்கையில், கெருப்பில் பொன் உருகி நெளிவதுபோல, வேதனையின் தூய்மையில்தான் ஜ்வலிக்கிறாள். அவளுக்கு அவள் கதி நேர்ந்த பின், மற்றவர் போல் தெறித்துக் கொண்டு பிறந்தகம் போகாமல், எங்களோடு ஒருவராய், இதுவரை இங்கேயே அவள் தங்கியிருப்பதிலும் ஒரு அழகு பொலிகின்றது.
அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச் சற்றுக் குரல் தணிந்தது.
'ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு. குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக் கையே, இது கியாயமா?'
கியாயமாம் கியாயம் உலகத்தில் கியாயம் எங்கேயி ருக்கு?'
காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று. “அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?’’ ‘பாட்டி பாட்டி? கான் ஒண்ணுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சுண்டு வந்து இதோ பாரு அம்மா'ன்னு இவள் முகத்தெதிரே நீட்டினேன். அவ்வளவு தான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனியவெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ் சுட்டா, பாட்டி!' பையனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார். - -- -
'இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப் பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு. உன்னை என்ன பண்ணால் தகாது?”
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/143
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
