பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60n・ ザ・ rf... 131 அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது, :யுேம் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை கினைப்புக்கு, அவனை யாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன், இன்னிக்குத்தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தை கொண்டாடிக்க கானும்தான் பிள்ளையைத் தோத்துாட்டு கிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளைய வல்லை?" - மன்னி சீறினாள். உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்கு கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?” நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். 'அம்மாவை நேரிடையாகப் பார்த்து அப்படிப் பேசற வாளும் இருக்காளா? இன்னிக்கு விடிஞ்ச வேளை என்ன வேளை?" அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை, குழந்தையைக் கீழே யிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார். மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக்கொண்டு குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார். காந்தி, இதோ பார், இதோ பாரம்மா-'

சேகர் ஒரு ஊசி மாத்தாப்பை அம்மாவுக்கும் பாட்டிக்கும் முகத்துக்கு கேர் பிடித்துச் சிரித்துக் கொண்டி ருந்தான். அவன் கன்னத்தில் கண்ணிர் இன்னும் காயு வில்லை.