பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ராக் விளம்பித் அபிராமி தினமும் படுக்கப் போகுமுன், ஒரு வெகுநாளைய பழக்கம், வானத்தைப் பார்த்துக் கொள்வேன். ஜன்னலண்டை கட்டில்: அல்லது கட்டிலண்டை ஜன்னல், இப்படி ஒரு காரணம் சொல்லிக் கொள்ளலாம். அல்லது ஜன்மேதி ஜன்மமாய் ஆனால் ஜன்மாவுக்கே புரியாமல், அதன் அடி உணர்வில், அதன் அடிப்படை பயம். அடுத்த முறை எட்டிப் பார்க்க வானம் இருக்குமோ? யோசித்துப் பார்க்கையில், இது ஒன்றும் அவ்வளவு பயித்தியக்கார பயம் அல்ல. பரஸ்பர ஆகர்ஷணத்தில் தானே ஒன்றையொன்று இழுத்துப் பிடித்துக்கொண்டிருக் கின்றன. கிரகங்கள்! இந்த ஈர்ப்பு என்றேன்னும் எள்ளுப் பிசகட்டும்)????? வானமாவது, பூமியாவது-அப்புறம் அவனுடைய ஊழிச் சிரிப்புத்தான் மிச்சம். ஆனால் அதையும் கேட்க யார் இருப்பார்? நான் இருப்பேன். ஏனெனில், அவன் ஒன்று உண்டென வகுத்து, வரித்து, வஹிப்பவனே கான். கானில்லாது அவனேது; ஆகையால் இருக்கிறேன். இருப்பேன் என் பதற்கு என்னிலும் சான்று என்ன வேண்டும்? ஆனால் அந்தச் சிரிப்பு நேரும் போது, எனக்குக் கேட்காது. அவனில் ஆகையால், அந்தச் சிரிப்பில் நானாக இருப்பேனன்றி எனக்குச் சொந்தமான நான், என்னைக் காண இராது. சிரிப்பு ஒன்று உண்டு, தெரிகிறது.