பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


136 அபிராமி திடுக் விழித்துக்கொண்டேன். நீர்வீழ்ச்சியின் இரைச்சல். எங்கிருந்து இது? எழுப்பியது அதுதானோ? ஈடு கிசி ரேடியோவை அணைக்க மறந்து அதன் கடபுடா கடபுடாவா?’’ கட்டிலருகே குட்டி மேசை மேல் எட்டித் தொட்டுப் பார்க்கிறேன். அணைக்க மறக்கவில்லையே! விழித்துக் கொண்டதில் சந்தேகமில்லை. ஆகையால் இந்த ஓசை கனவல்ல. அதனாலேயே மனமெனும் திகைப்பு, திக்குத் தெரியாமல் திரிந்து, இங்கு வந்து விட்ட புரியாத ஏதோ ஒரு வேளையின் பெரு மூச்சு. அதில் மனத்தின் மயக்கு, மனமெனும் மயக்கு பக்கத்துத் தலையணையிலிருந்து கம்மென்று மல்லி. உடல் பரபரக் கிறது. இருளில் கைத்துழாவலுக்குப் பக்கத்துத் தலையணை காலி. சில நாட்களாகவே காலி. பிறந்தகம். அவள் கூந்தலின்று உதிர்ந்து அவளுடைய வழக்கமான அசிரத்தையில் விட்டுச் சென்றவையென்று சொல்ல வாடிய உதிரிகள் கூட இல்லை. இது ஜாதி ஜாது. மனத்தின் ஜவ்வாது. விளக்கைப் போட துணிவு இல்லை. தருணம் நலுங்கிவிட்டால்? துரத்தில், துர், தார் பஹ" தார் எட்டிப் போய் விட்ட ர்ேவீழ்ச்சி. ஒசை நரம்புகள் பிரிந்து, நரம்புகள் தனித்தனி விதிர் உதிர்ந்து, இசை காட்டி, கரககிதம்; பரஸ்பர ஆகர்ஷணத்தில், கிரகங்கள் ஒன்றையொன்று வலிக்கும் பிகித்தனில் ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம். இதுவே நீர்வீழ்ச்சி. இதுவே நரம்பிசை. இதுவே அந்தர் கானம், இதய மீட்டல், சோகஸ்-கா ராக்விளம்பித் இசைப் பாகுகள்