பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வா. ச். ரா. #39 நெஞ்சில், கண்ணிரில் நனைந்த சருகுகள் சலசலக் கின்றன. அவைகள் மேல் யாரோ கடக்கிறார்கள். அபிராமி (!)?(!)(?)(1)(1)(1) - முன்பின் காரணம் தெரியாது. மோனத்தின் உச்சரிப் பில் உதிர்ந்த காமம். உடனே அதன் உருவை, அதன் கும் விலையுடன் எடுக்கின்றது. சித்தரங்கத்தில் அபிராமியின் பிம்பம் புலுபுலு புலர்கின்றாள். - சொந்தமாயும், கடன் வாங்கியும், பூட்டிய நகை களுடன், முழங்காலுக்கும் கீழிறங்கிய திண்டுமாலை அசைய ஸர்வாபரண் பூவிதையாய் கர்பக்ரஹத்தினின்று மூலவிக்ரஹம் உயிர்த்துப் புறப்பட்டாற் போன்று, கல்யாண கோலத்தில் காrயளிக்கிறாள். ராக் விளம்பித்தி லிருந்து அவதாரம் எடுத்திருக்கிறாள். அவதாரச் சூட்டில் வேர்வை அவள் நெற்றியில் முத்திட்டிருக்கிறது. மார்பு லேசாக மிதப்பாடுகிறது. ஆனால் ராக் விளம்பித் இன்னும் வாய் பிளந்தேயிருக் கிறது. ராகங்கள் எப்படி பிறக்கின்றன? உயிர்மேல் விரிந்த சிறகிருளில், ஸ்மரணை தன்னைத் தேடி அலைகையில் அந்தத் தேடல் அலைகளின் உச்சங்கள் வெவ்வேறாய், தனித்தனியாய்த் தவிக்கையில் அவைகளின் மறுபெயர் ஸ்வரங்கள், ஒன்றுக்கொன்று துணை தேடி, ஒன்றையொன்று பற்றிப் பிறக்கின்றன. அத்தனையும் பிந்து மாலைகள். ராக் பூபாளி மோஹனம் ராக்கலாவதி மலயமாருதம் ராக் அபிராமி