லா, ச். ரீ. 141
யில் கையெழுத்துப் போடமட்டும் நாயுடு எப்படியோ கற்றுக்கொண்டு விட்டார்.
அபிராமி, காயுடு இவர்களின் இப்படியான அபூர்வ மான வருகையில் எங்கள் வீடு பெருமை கொண்டது.
வேர்த்துக் கொட்டுகிறது. அப்பா என்ன நெரிசல், என்ன நெரிசல் மூச்சே திணறுகிறது. வெளியே இருப் பவர் உள்ளேவர முடியவில்லை. நான் உள்ளே மாட்டிக் கொண்டு விட்டேன். .
நாயுடு தலையில் முண்டாசு. காத்தவராயன் மீசை யுடன், ஆறடி உயரத்தில், தொந்தியும் தொப்பையுமாக, ஆட்களை இரைச்சலாக கார்வார் பண்ணிக்கொண்டு, கூட்டத்தில் புகுந்து வளைய வந்து கொண்டிருக்கிறார். சம்பந்தியும் அவ்விதமே. அவரும் ஆகிருதியில் நாயுடுவுக் குச் சளைத்தவரல்ல. இவர் இந்தப் பக்கம், அவர் அந்தப் பக்கமாக வந்து, இருவரும் கோயில் திருவிழாவில் பூதப் பொம்மைகள் போல, தொந்திகள் முட்டிக் கொண்டனர். மணப்பந்தலில் மாப்பிள்ளை இப்பவே தோசைமாவாக உடல் பொங்கி வழிகிறான். அப்பா வயசுக்கு எப்படி ஆவானோ?
விருட்டென மணமகனின் பக்கலினின்று அபிராமி எழுந்து, புன்முறுவல் மாறாமல் புழைக்கடைப் பக்கம் போகிறாள். தோழிப்பெண் ஜாடை அறிந்து பின் தொடர் கிறாள். ஆனால் அதற்குள் அபிராமி காலடி முன் போயாச்சு. யாவரும் அவளுக்கு வழிவிடுகிறோம். என்ன நெரிசல் என்ன புழுக்கம்!! மணப்பெண்ணுக்கே மூல வருக்கு எண்ணெய்க் காப்பு இட்டாற்போல் முகம் கசகசக் கிறது. அந்தப் பளபளப்பிலும் ஒரு பாக்தம் இருக்கிறது. கூட்டத்தில் என்னைக் கண்டதும். அவள் கடை, இமைநேரம் தடைப்பட்டதோ எங்கள் கண்கள் சந்திக் கின்றன. உடனே கடந்துபோய் விட்டாள்.
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/154
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
