பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அபிராமி அப்பா, என்ன கூட்டம் என்ன கூட்டம்!! நாயுடு கல்யாணத்துக்கு அழைக்கவில்லை. உத்தரவு போட்டு விட்டார். யார் வீட்டிலும் அடுப்பு மூட்டக்கூடாது. முதல் நாள் இரவு; இன்று பூரா. சமையல் பெருமாள் கோயில் மடப்பள்ளியில் கடக்குது. பந்தியும் கோவில்லேதான். தவசிப் பிள்ளைங்க நாற்பது பேரு பட்டணத்திலிருந்து ஜமாவா வந்து இறங்கி இருக்காங்க. 'இதென்ன முகூர்த்த வேளை நெருங்கிக்கொண்டிருக் கிற சமயத்தில் மணப்பெண்ணுக்கு ஏதோ அவசரம் வந்துட்டதே!” வாய்விட்ட சொல்ல முடியாமல், புரோகிதர் கையைப் பிசைவதற்குப் பதிலாக அவ்வப்போது மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக்கொள் "ஐயோ! ஐயோ!! ஐயையோ!!! கொல்லைப்புறத்திலிருந்து அலறல் வருகிறது. பயத் தில் எதிர் அலறல்; அலறிக்கொண்டு எல்லோரும் புழைக் கடைக்கு ஓடுகிறோம். தோழிப்பெண் வாயில் அடித்துக்கொண்டு அதோ கிணற்றைச் சுட்டிக்காட்டுகிறாள். அவளுக்கு விழிகள் பிதுங்கிவிட்டன. "ஐயோ! ஐயோ!!’ காக்கு வேறு சத்தத்துக்கு எழவில்லை. வாயில் அடித் துக் கொள்வதோடு சரி. கிணற்றைச் சுட்டிச் சுட்டி, காட்டு வதோடு சரி. கைவேறு செயல்படவில்லை. முகூர்த்தம். அபிராமி அப்படித்தான் வேளை பார்த் திருக்கிறாள். ராக் விளம்பித்துள் மறையl அதை அவள் ஸ்மரணை பூர்வமாக அறியாள். ஆனால் எப்பவும் நடப்பதென்னவோ அதுதான்.