பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GUir g ff・ 143 ஒவ்வொரு பிறவியும் ஒரு ஸ்வரம் அல்லது விளம்பித் தினின்று ஜன்யராகம். விளம்பித் அனாதி, பின் நேர்ந்தவைக்குத் தக்க பாஷை என்னிடம் இல்லை. எப்படிச் சொன்னாலும் அது பாஷையை அசிங்கப் படுத்துவதாகும். அப்படியும், விகாரங்களையும் சொல்லித் தானே ஆகவேண்டி இருக்கிறது. பெற்றோர் உற்றோர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும். ஊரே கொல் ஆனது ஒரு பக்கம் இருக்கட்டும். மணவறையே பிணவறையாய்-சம்பிரதாயப்பாட்டு ஒப்பாரி மேற்கோள்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். சாயந்தரமே எடுத்துடறதா? இல்லே, மறுநாள் காலையா? மேல் காரியத்தை ஒட்ட வேண்டுமே! அந்தக் கேள்வி ஒரு பக்கமிருக்கட்டும். நாயுடுவுக்கு வேண்டாதவர் களும் இருக்கிறார்கள் என்பது இப்போ துப்புறத் தெரிங் தது. சுட்டித்தான் காட்ட முடியாது. லக்ஷ்மி ஒரிடத்தில் வளருகையிலேயே, கூடவே ஒரு பொறாமைக் கும்பலையும் வளர்க்கிறாள். இனம் தெரியாது. கும்பலோடு கும்பல். வத்தி வைத்தது யார் தெரியவில்லை. மத்யானமே, போலீஸ்-மூன்றாவது மைலில் எங்களுக்குப் போலீஸ் ஸ்டேஷன்-வந்துவிட்டது ஆம்புலன்சுடன். வியாபார ரீதி யில்-மாமூல், நாயுடுவிடமிருந்து சேரவேண்டிய இடங்களில் சரியாகச் சேரவில்லையோ? சப்-இன்பெக்டர் புதுசோ? நாயுடுவின் செல்வாக்கு, விஷயத்தை அப்படியே குரல் வளையைப் பிடித்து அமுக்க முடியவில்லை. தனியாக அழைத்துப் போய்ப் பேசாமல் இருந்திருப்பாரா?